வியாபார வெளிநாட்டு செலாவணி நாணய கணக்குகளைத் (BFCA) திறப்பதற்குத் தகைமை பெறும் நபர்கள்
- வெளிநாட்டுச் செலாவணியை உழைக்கும், இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில் வதிகின்ற பின்வரும் ஆட்கள்.
- இலங்கையில் வதிகின்ற தனியாளொருவர்.
- இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியுரிமையாண்மையின் உரிமையாளர் அல்லது பங்காண்மையின் பெரும்பான்மையோரான பங்காளர்கள் இலங்கையில் வதியுமிடத்து, (இரு பங்காளர்களுடனான பங்காண்மையொன்றின் விடயத்தில் குறைந்தபட்சம் ஒரு பங்காளரேனும் இலங்கையில் வதிபவராகவிருத்தல் வேண்டும்) அத்தனியுரிமையாண்மை அல்லது பங்காளர்.
- இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டவொரு கம்பெனி.
- 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கடல்கடந்த கம்பெனியொன்றாகப் பதிவுசெய்யப்பட்ட, இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டவொரு கம்பெனி.
- இயைபான துறை அமைச்சுச் செயலாளரின் அல்லது தோதான அதிகாரியின் விதப்புரையுடன் அரச நிறுவனமொன்று.
- முறையே வணிகக் கப்பற்றொழில் பணிப்பாளர் தலைமையதிபதியினாலும் இலங்கைக் குடியியல் வான்செலவு அதிகாரசபையின் பணிப்பாளர் தலைமையதிபதியினாலும் வழங்கப்பட்ட செல்லுபடியான உரிமத்துடன் அல்லது அதிகாரவளிப்புக் கடிதத்துடன் ஒரு வெளிநாட்டு கப்பற்றொழில் கம்பெனியின் அல்லது வானூர்திக் கம்பெனியின் சார்பில் (வெளிநாட்டு முதல்வர்) இலங்கையில் கப்பற்றொழில் முகவராக அல்லது பொது விற்பனை முகவராகத் தொழில் கொண்டுநடாத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர்.
- அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடம் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைப் (BFCA) பேணிவந்த ஓர் இறந்துள்ள ஆளின் மரணச்சொத்தினது நிருவாகம் பூர்த்திசெய்யப்படும்வரை அத்தகைய இறந்துள்ள அந்த ஆளின் மரணச்சொத்தினது நிருவாகி அல்லது நிறைவேற்றுநர்.
- அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடம் வியாபார வெளிநாட்டு நாணய கணக்கொனறைப் பேணிவந்த கம்பெனியொன்றின் பெயரில், வழக்கு நடவடிக்கைகள் முடிவுறும்வரை பெறுநர் அல்லது ஒழிப்போன் ஒருவர்.
அரசசார்பற்ற ஒழுங்கமைப்பொன்று வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைத் (BFCA)திறப்பதற்கும் அனுமதிக்கப்படுதலாகாது.
- பண்டங்களையும் சேவைகளையும் ஏற்றுமதிசெய்தல், ஏற்றியிறக்குநிலைய வியாபாரம், கணக்கு வைத்திருப்பவரினால் பொறுப்பேற்கப்பட்ட கடல்கடந்த கருத்திட்டங்கள், இலங்கைக்கு வெளியே செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவருக்கு உள்ளூரில் வழங்கப்பட்ட பண்டங்கள் என்பன தொடர்பில் வங்கித் தொழில் முறைமையினூடாக வெளிநாட்டிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியில் பெறப்பட்ட அனுப்புதொகைகள்.
- கடல்கடந்த தொழில்தருநர்களுக்குச் சேவையளிக்கின்ற இலங்கையரின் வேதனங்கள் அத்துடன்/அல்லது உழைப்புகளைச் செலுத்தீடுசெய்வதற்காகக் கணக்கு வைத்திருப்பவர் எந்தத் தொழில்தருநரிடம் ஒழுங்கேற்பாடொன்றைக் கொண்டுள்ளாரோ அத்தகைய கடல்கடந்த தொழில்தருநரிடமிருந்து வங்கித் தொழில் முறைமையினூடாக வெளிநாட்டு செலாவணியில் பெறப்பட்ட அனுப்புதொகைகள்
- இலங்கையிலுள்ள கணக்கு வைத்திருப்பவரினால் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவருக்கு வழங்கப்பட்ட பண்டங்களும் சேவைகளும் தொடர்பில் அத்தகைய ஆளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயணிகள் காசோலைகள், வங்கி வரைவுகள் அல்லது நாணயத் தாள்கள் என்ற வடிவத்திலான வெளிநாட்டு நாணயம்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கையில் ஒரு கப்பற்றொழில் முகவராக அல்லது ஒரு பொது விற்பனை முகவராக இருக்குமிடத்து அந்தந்த முகவராண்மை உடன்படிக்கைகளின் கீழான நோக்கங்களுக்காக அந்தந்த வெளிநாட்டு முதல்வரிடமிருந்து அல்லது வெளிநாட்டு முதல்வரின் சார்பில் ஒரு மூன்றாந்திறத்தவரிடமிருந்து வங்கித் தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணியில் பெறப்பட்ட அனுப்புதொகைகள்.
- ஒரு வியாபார வெளிநாட்டு நாணயக் (BFCA) கணக்குக்கெதிரான அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறில் பேணப்பட்டவொரு கணக்குக்கெதிரான அனுப்புதொகை என்றவகையாக, வெளிநாட்டு முதல்வரின்சார்பில் இலங்கையிலுள்ள கப்பற்றொழில் முகவராக அல்லது பொது விற்பனை முகவராக உள்ள கணக்கு வைத்திருப்பவரினால் வெளிநாட்டு செலாவணியில் சேகரிக்கப்பட்ட கப்பற்சரக்குக் கட்டணம்.
- (அதாவது, வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அநா.டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்கு சமமானதை விஞ்சுமிடத்து அல்லது அதற்கு சமமாகவிருக்குமிடத்து சுங்கத் திணைக்களத்துக்கான வெளிப்படுத்துகையின்மீது அல்லது அத்தகைய வெளிநாட்டு நாணயத் தாள்கள் 15,000 ஐ.அநா.டொலருக்கு அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதற்குக் குறைவாகவிருக்குமிடத்து அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிக்கான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிக்கான தோதான வெளிப்படுத்துகையின்மீது) கணக்கு வைத்திருப்பவரினால் வெளிப்படுத்துகையின்மேல் இலங்கையினுள் கொண்டுவரப்படும் வெளிநாட்டு நாணயம்.
- கணக்கு வைத்திருப்பவரைப் பொருட்படுத்தாது, வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலிருந்தான (BFCA) அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறில் பேணப்பட்ட கணக்குகளிலிருந்தான கைமாற்றல்கள்.
- வதிபவரொருவருக்கு வழங்கப்பட்ட பண்டங்களுக்கான அல்லது சேவைகளுக்கான பிரதிபயனாகவுள்ள கணக்கு வைத்திருப்பவரின் சார்பில் வெளிநாட்டுச் செலாவணியில் பெறப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகள் அல்லது கொடுக்கல் வாங்கல்களின் வகுதிகள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளினால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு அக்கொடுப்பனவுகள்.
- மத்திய வங்கியின் முன்னங்கீகாரத்துடன், ஓர் அதிகாரம் அளிக்கப்பட்ட வியாபாரியின் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியின் உள்ளக வங்கித்தொழிற் கூறிலிருந்து அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறிலிருந்து கணக்கு வைத்திருப்பவரினால் பெறப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடன்களினதும் முற்பணங்களினதும் வரும்படிகள்.
- சொத்தானது வியாபார வெளிநாட்டு நாணய கணக்கைப் (BFCA) பற்று வைப்பதன் மூலம் கொள்ளப்பட்டுள்ளவிடத்து, கணக்கு வைத்திருப்பவரின் ஏதேனும் வெளிநாட்டு சொத்தின் விற்பனையிலிருந்தான வரும்படிகள் அல்லது அதன் ஏதேனும் பாகம்.
- மூலக் கைமாற்றல் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கைப் (BFCA) பற்று வைப்பதன் மூலம் (அல்லது இக்கட்டளை பயனுடையதாக வருவதற்கு முன்னர் கணக்குவைத்திருப்பவரின் வெளிநாட்டு செலாவணி உழைப்போர் கணக்கிலிருந்து (FEEA) செய்யப்பட்டிருப்பின்;, வெளிநாட்டு நாணயத்தில் இலங்கையில் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து எழுகின்ற மூலதனம், மூலதன ஈட்டுகைகள் மற்றும் வேறு பெறுகைகள்.
- மூல முதலீடு, இக்கட்டளை பயனுடையதாக வருவதற்கு முன்னர் கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டுச் செலாவணி உழைப்போர் கணக்கைப் (FEEA) பற்றுவைப்பதன்மூலம் செய்யப்பட்டிருப்பின், வெளித்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றினுள் (OIA) வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட மூலதனம் மற்றும் மூலதன ஈட்டுகைகள்.
- வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் (BFCA) பற்று வைப்பதன் மூலம் 'அனுமதி பெற்ற பற்றுவைத்தலின்' கீழ் 4 (இ) மற்றும் 4 (ஈ) ஆகிய பந்திகளின்படி கணக்கு வைத்திருப்பவரினால் பெறப்பட்ட பயன்படுத்தாத வெளிநாட்டு நாணயம்.
- வெளிநாட்டுப் பயண அட்டை வியாபார வெளிநாட்டு செலாவணி கணக்கிலிருந்து (BFCA) நிரப்பப்பட்டிருந்த தொகைவரை, அதே கணக்குவைத்திருப்பவரின் அத்தகைய வெளிநாட்டுப் பயண அட்டவணையில் எஞ்சியுள்ள பயன்படுத்தப்படாத மீதி.
- தகவுடைய வாடிக்கையாளர்களுக்கும் கூட்டுக் காப்புறுதியாளர்களுக்கும் வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் பெயர்க்குறிக்கப்பட்ட காப்புறுதிப்பத்திரங்களின் மீது கணக்கு வைத்திருப்பவரினால் பெறப்பட்ட காப்புறுதிக் கட்டுப்பணங்களும் இலங்கை காப்புறுதிச் சபையிடம் பதிவுசெய்யப்பட்ட காப்புறுதிக் கம்பெனிகளினால் மீள் காப்புறுதியாளர்களிடமிருந்தும் தேசியக் காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திடமிருந்தும் பெறப்பட்ட உரிமைக்கோரிக்கைகளும்.
- சம்பளங்களினதும் வேறெவையேனும் நன்மைகளினதும் மிகைக் கொடுப்பனவுகளாகவுள்ள, இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவரல்லாத ஊழியரின் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்தான (PFCA) கைமாற்றலகள்.
- காலத்துக்குக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய வேறேதேனும் வகுதியினவான கணக்குகளிருந்தான, கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள்.
- சட்டத்தின் 8 (3)ஆம் பிரிவின் நியதிகளின்படி கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து இலங்கைக்கு வெளியேயிருந்து அனுப்பப்படும் அனுப்புதொகைகள். (சட்டத்தின் குறித்த பக்கங்களின் பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது - இணைப்பு 2)
- கணக்கில் வைத்திருக்கப்பட்ட நிதிகளின்மீது வெளிநாட்டு நாணயத்தில் உழைக்கப்பட்ட வட்டி.
- விற்கப்பட்ட பண்டங்களுக்கு அல்லது வழங்கப்பட்ட சேவைகளுக்கு வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA) வைத்திருப்பவர்களின் சார்பில் இலங்கையில் வங்கித்தொழிற் கூறிலிருந்து வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய வரைவுகள்.
- கணக்கில் வைத்திருக்கப்பட்ட நிதிகளின்மீது வெளிநாட்டு நாணயத்தில் உழைக்கப்பட்ட வட்டி.
- விற்கப்பட்ட பண்டங்களுக்கு அல்லது வழங்கப்பட்ட சேவைகளுக்கு வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA) வைத்திருப்பவர்களின் சார்பில் இலங்கையில் வங்கித்தொழிற் கூறிலிருந்து வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணய வரைவுகள்.
- சட்டத்தின் கீழுள்ள ஏற்பாடுகளின்படியான அனுமதியின்மீது பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடனாக (தனிசுப் பிணையங்கள் உள்ளடங்களாக), வெளிநாட்டு கடன் கொடுக்கும் ஆளொருவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றிலிருந்து (IIA) கைமாற்றல் (இலங்கைக்கு வெளியில் மூலதன கொடுக்கல்வாங்கலின் பொருட்டு பெற்றுக்கொண்ட கடன் நீங்கலாக).
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவருக்கு பண்டங்கள் சேவைகளை வழங்கியதற்காக கிடைக்கும் பெறுகைகள், இலங்கைக்கு வெளியில் வழங்கப்பட்ட இலத்திரனியல் நிதி மாற்ற அட்டையொன்றைப் (EFTC) பயன்படுத்தி அல்லது இலத்திரனியல் தரவுகள் பயன்படுத்துனர் டர்மினல்மூலம் அல்லது இணைய செலுத்தீடுகள் நுழைவுவழி ஊடாகச் (EDC/IPG) செய்யப்பட்டிருந்தாலும் அவ்வாறு பெற்ற நிதியத்தில் இலங்கைக்கு வெளியில் வழங்கப்பட்டு இலத்திரனியல் நிதி மாற்ற அட்டையொன்றைப் பயன்படுத்தி செலுத்தீடுகளைச் செய்ததாக, இலத்திரனியல் தரவுகள் பயன்படுத்துனர் (EDC/ இணைய கொடுப்பனவு (IPG) வழங்குநரின் எழுத்துமூல உறுதிப்படுத்தலுக்குட்பட்டு மாத்திரம் வங்கியினால் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் (BFCA) வரவுவைத்தல்.
- கணக்குவைத்திருப்பவரினால் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவருக்கு வழங்கப்பட்ட அசையா சொத்தொன்று தொடர்பில் வரி அல்லது வாடகை என்றவகையாக வங்கித்தொழிற்கூறில் வெளிநாட்டுச் செலாவணியிலிருந்து பெறப்பட்ட அனுப்புதொகைகள்.
- கணக்குவைத்திருப்பவர் இலங்கையில் உள்ள, வீடுகள் தொடர்பிலான சொத்துக்களைக்கையகப்படுத்திக்கொள்ளுதல்/நிர்மாணித்தல்/அபிவிருத்திசெய்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய தேவைகளுக்கு வெளிநாட்டு நாணய கடன் கணக்கிலிருந்து (FCLA) நிதியங்களை மாற்றல்.
- இலங்கைக்கு வெளியே செய்யப்பட்ட எவையேனும் வெளித்திரும்பல் அனுப்புதொகைகள்.
- இலங்கை ரூபாக்களில் இலங்கையிலான செலுத்தீடுகள்.
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறாகப் பயண நோக்கத்துக்காக 10,000 ஐ.அநா டொலர்வரை (அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதுவரை) வெளிநாட்டு நாணயத்தாள்களினாலான மீளப்பெறுதல்.
- தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்துகையைச் சமர்ப்பிப்பதன்மேல் வெளிநாட்டில் பட்டைதீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட அல்லது பட்டைதீட்டப்படாத இரத்தினக்கற்களையும் வேறு மூலப்பொருட்களையும் கொள்வனவுசெய்யும் நோக்கத்துக்காக இரத்தினக்கல் மற்றும் ஆபரண வியாபாரிகளினால் ஒருதடவையில் 50,000 ஐ.அநா டொலர்வரை (அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதுவரை) வெளிநாட்டு நாணயத்தாள்களினாலான மீளப்பெறுதல்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கையில் ஒரு கப்பற்றொழில் முகவராக அல்லது ஒரு பொது விற்பனை முகவராக இருக்குமிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியினால் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியினால் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுடனான கோரிக்கையொன்றின்மீது, வெளிநாட்டு முதல்வரிடமிருந்து அல்லது வெளிநாட்டு முதல்வரின் சார்பில் பெயர்க்குறிக்கப்பட்ட மூன்றாந்திறத்தவரிடமிருந்து பெறப்பட்ட உட்திரும்பல் அனுப்புதொகைக்கெதிராகக் கப்பற்றலைவர்களுக்கான பணம்(CASH TO MASTERS) என்றவகையாக ஒவ்வொரு வருகைக்கும் ஒவ்வொரு கலத்துக்கும் 50,000 ஐ.அநா டொலர்வரை (அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதுவரை) வெளிநாட்டு நாணயத்தாள்களில் மீளப்பெறுதல்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கையில் ஒரு கப்பற்றொழில் முகவராக அல்லது ஒரு பொது விற்பனை முகவராக இருக்குமிடத்து, மேன்மிகையான நிதிகளை வெளிநாட்டு முதல்வருக்குத் திருப்பியனுப்புதல் ஆயின் அரசாங்கத்துக்குச் செலுத்தப்படற்பாலதான வரியும் முகவராண்மைத் தரகும் உட்பட, இலங்கையில் வெளிநாட்டு முதல்வரின் எல்லா உள்ளூர்ப் பொறுப்புக்களையும் எதிர்கொள்வதற்குக் கணக்கில் போதிய நிதிகள் வைத்திருக்கப்பட்டுள்ளன என்ற பொருள்பட, கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து (அதாவது முகவரிடமிருந்து) எழுத்திலான உறுதிப்படுத்துகை பெறப்படுதல் வேண்டும்.
- கணக்கு வைத்திருப்பவரைப் பொருட்படுத்தாது, வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள், தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் அல்லது கரைகடந்த வங்கித்தொழிற்கூறில் பேணப்பட்ட கணக்குகள் என்பவற்றுக்கான கைமாற்றல்கள்.
- அக் கணக்கு வைத்திருப்பவரின் வெளிதிரும்பல் முதலீட்டுக் கணக்குக்கான (OIA) கைமாற்றல்கள்.
- கணக்கு வைத்திருப்பவரினால் அத்தகைய வெளிநாட்டு கடன்தருநரிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு நாணயக் கடனை மீளக்கொடுப்பனவு செய்யும் நோக்கத்துக்காக இலங்கைக்கு வெளியே வதிகின்றவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கொன்றுக்கான கைமாற்றல்கள்.
- ஒரு வெளிநாட்டுப் பயண அட்டையை உள்நிரப்புவதற்காக நிதிகளைக் கைமாற்றுதல்.
- கணக்கு வைத்திருப்பவரினால் அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட தனிசுசார் கொடுப்பனவுகளும் வெளிநாட்டு நாணயத்தை மீளக் கொடுப்பனவு செய்தலும்.
- வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கிலுள்ள நிதிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணயத்தில் இலங்கையில் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஏதேனும் முதலீடுகள் தொடர்பிலான கைமாற்றல்கள்.
- வெளிநாட்டு நாணயத்தில் பெயர்க்குறிக்கப்பட்ட காப்புறுதிப்பத்திரங்கள், உள்ளூர் அல்லது கடல்கடந்த மீள்காப்புறுதியாளர்களுக்கும் தேசிய காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்துக்குமான கட்டுப்பணங்கள் மற்றும் இலங்கைக் காப்புறுதிச் சபையிடம் பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பெனிகளினாலான தரகுப்பணம் என்பன தொடர்பில் தகவுடைய வாடிக்கையாளர்களுக்கும் கூட்டுக் காப்புறுதியாளர்களுக்கும் உரிமை கோரிக்கைகளின் கொடுப்பனவுகள்.
- அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, கொடுக்கல்வாங்கல்கள் அல்லது வகுதியினவான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தில் வதிவுள்ளோருக்கான கொடுப்பனவுகள்.
- காலத்துக்குக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதியளிக்கக்கூடிய வேறேதேனும் வகுதியினவான கணக்குகளிலிருந்தான, கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களுக்கான கைமாற்றல்கள்.
எச்சூழ்நிலைகளின் கீழும் இலங்கை ரூபாக்க்ள் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டு ஒரு வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கினுள்(BFCA) வரவுவைக்கப்படுதலாகாது.
பொது
வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (BFCA), எந்தவொரு பெயர்க் குறிப்பிட்டப்பட்ட நாணய வகையிலானதாக அதாவது, USD, GBP, EUR, AUD, CAD, HKD, SGD, JPY, SEK, NZD, DKK, NOk, CNY, மற்றும் CHF ஆகிய வெளிநாட்டு நாணயத்தில் சேமிப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள் (காசோலை வரைகின்ற வசதியின்றி) அல்லது நிலையான வைப்புக் கணக்குகளாகத் திறக்கப்படலாம் மற்றும் பேணப்படலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய பத்திரங்கள்
- தனி ஆட்களுக்காக, கணக்குத் திறக்கும் விண்ணப்ப படிவம், தேசிய அடையாள அட்டையின் அல்லது கடவுச்சீட்டின் (புகைப்படம்;, விபரங்கள் மற்றும் திருத்தங்கள் என்பவற்றைக் காட்டுகின்ற பக்கம்) பிரதிகள், 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்' (KYC) படிவம், வெளிநாட்டு கணக்குகளுக்கு வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம் (FATCA) வெளிப்படுத்துகை மற்றும் வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்.
- தனியாள் வியாபார, கூட்டு வியாபார மற்றும் கம்பெனிகள் தொடர்பாக, கணக்குத் திறக்கும் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புள்ளவாறு அடையாளம் காணும் பத்திரங்கள் 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்' (KYC) படிவம், வெளிநாட்டு கணக்குகளுக்கு வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம் (FATCA) வெளிப்படுத்துகை மற்றும் வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்.
- வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கைத் (BFCA) திறப்பதற்கு ஏற்புடையவாறு, அவர்களின் தகவை உறுதிப்படுத்துவதற்கான பத்திரங்கள்.
மேலதிக விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மக்கள் வங்கிக் கிளைக்கு செல்லுங்கள் அல்லது எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்