தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

உயர் மட்ட பணப்புழக்கம் மற்றும் மிகவும் குறுகிய கால முதிர்வுகள் வர்த்தகம் செய்யப்படும் ஒரு நிதிக் கருவியே பணச் சந்தையாகும். இதில் பங்குபற்றுபவர்கள் குறுகிய கால அடிப்படையில் கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுத்தல் நடவடிக்கைகளுக்கு இதனை உபயோகிப்பதுடன், முதிர்வுகாலமானது ஒரே நாளிலிருந்து ஒரு வருடத்திற்கும் குறைந்த காலப் பகுதியாக அமைவது வழக்கம். மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் ஒப்பந்தங்கள், வைப்புத்தொகைக்குரிய சான்றிதழ்கள், வங்கியாளர்களின் ஏற்றுக்கொள்ளுதல்கள், திறைசேரி உண்டியல்கள், வர்த்தகப் பத்திரம், நகராட்சி நிதிப் பத்திரங்கள், மத்திய நிதிகள் மற்றும் மீள்கொள்வனவு உடன்படிக்கையின் கீழான கடன் பெறுதல் போன்றவை வழமையான பணச் சந்தை கருவிகளாகும்.

 

பாரிய தொகை முதலீடுகளுக்கான விசேட வீதங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள தயவுசெய்து திறைசேரி பண உதவு மையத்தை தொடர்பு கொள்ளவும்

 

உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் ஒப்பந்தங்கள் (கடன் பெறுனர்)

பிணையங்களைக் கொண்டுள்ளவர் நிர்ணயிக்கப்பட்ட எதிர்காலத் திகதியில் நிலையான விலைப்பெறுமதியில் மீள்கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துடன் முதலீட்டாளர் ஒருவருக்கு அப்பிணையங்களை விற்பனை செய்வது உடன்படிக்கையின் கீழான கடன் வழங்கல் ஒப்பந்தமாகும். இந்த உடன்படிக்கை காலத்தில் “கொள்வனவாளரிடமிருந்து” பணத்தை பிணையமாக “விற்பனையாளர்” பெற்றுக்கொள்வதுடன், “கடன் வழங்குபவருக்கு” பயன் கிட்டும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளன.

உடன்படிக்கையின் கீழான கடன்பெறுதல் ஒப்பந்தம் (கடன் வழங்குனர்)

பிணையங்களைக் கொண்டுள்ள ஒருவரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட எதிர்காலத் திகதியில் நிலையான விலைப் பெறுமானத்தில் அவற்றை விற்பனை செய்யும் வகையில் முதலீட்டாளர் ஒருவர் அப்பிணையங்களைக் கொள்வனவு செய்வது உடன்படிக்கையின் கீழான கடன்பெறுதல் ஒப்பந்தம் எனப்படுகின்றது. இந்த ஒப்பந்த காலத்தில் “கொள்வனவாளர்” பிணையமாக “விற்பனையாளரிடமிருந்து” பணத்தை கடனாகப் பெற்றுக்கொள்கின்றார்.

top