தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

எமது வங்கிச்சேவை உற்பத்திகள் மூலமாகவும், எமது வியாபாரத்தை முன்னெடுக்கும் வழிமுறையின் மூலமாகவும் சமூக மாற்றத்திற்கான பொறுப்புணர்வுடன் அதனை வழிநடாத்திச் செல்ல வேண்டும் என்பதில் நாம் தீவிர உணர்வுடன் உள்ளோம். இலங்கையில் அனைவருக்கும் கட்டுபடியாகும் வகையில், அவர்கள் வளர்ச்சி காண்பதற்கு உதவும் வகையில் நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் செயற்படுவதே எமது முதன்மையான நோக்கமாகும். நாம் நிதியைக் கையாள்வதில் சிறந்தவர்கள், எனினும் “மக்களை” கையாள்வதில் அதை விடவும் சிறப்பானவர்கள். எமது வாடிக்கையாளர்களுக்கு இலகுவில் முன்னெடுக்கக்கூடிய வகையில் நிதியியல் உதவிகளை வழங்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளுக்கான எமது கடன் திட்டங்களை வடிவமைத்துள்ளோம்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தித் திட்டம் (கடன்கள், கடன் வசதிகளுக்கான பத்திரங்கள், வைப்புச் சான்றுகள்)
  • தொழிற்படும் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்களும்
  • தகைமைக்கான விதிகள்
    சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் வர்த்தக நடவடிக்கைகள். ரூபா 15 மில்லியன் முதல் ரூபா 750 மில்லியன் வரையான வருடாந்த விற்பனைப்புரள்வைக் கொண்டுள்ள வியாபார நிறுவனங்கள் மற்றும் ரூபா 1.0 மில்லியன் முதல் ரூபா 5.0 மில்லியன் வரையான பங்கு முதலீட்டுடன் வியாபாரத்தை ஆரம்பிக்கும் நிறுவனங்கள்.
  • கடன் வழங்கப்படும் முறைகள்
    பின்வரும் செயற்திட்டங்கள் வியாபார முயற்சிகளுக்கான முதலீடுகள் மற்றும் தொழிற்படு மூலதனத்திற்கு கடன் வழங்கப்படும்:
  • விவசாயம்
  • விவசாயத்தை மையமாகக் கொண்ட செயற்திட்டங்கள்/ வியாபார முயற்சிகள்
  • கைத்தொழில் வியாபார முயற்சிகள்
  • வாணிப முயற்சிகள்
  • பால் மற்றும் பாலை மூலமாகக் கொண்ட உற்பத்தி தொடர்பான செயற்திட்டங்கள்
  • கால்நடை
  • வளர்ப்பு மீன்
  • மீன்பிடித் தொழிற்துறை
  • தகவல் தொழில்நுட்பம்
  • ஆடைத் தொழிற்துறை
  • சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் செயற்திட்டங்கள்
  • கட்டட நிர்மாணம்
  • அச்சிடல்
  • கல்வி
  • சேவை வழங்கல்கள்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம்
  • சுகாதார சேவைகள்
  • வேறு எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகள்
  • ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கான கடன் வசதிகள்
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தித் திட்டக் கடன்கள்
  • வட்டி வீதம்
    • உற்பத்தி மற்றும் சேவைகள் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 2.5%)
    • வர்த்தகம் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 3.5%)
  • அதிகபட்ச தொகை
    மதிப்பீட்டின் மூலமாக தேவை அடிப்படையில்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்ச சலுகைக் காலமாக 24 மாதங்கள் அடங்கலாக (தேவைப்படும் பட்சத்தில்) அதிகபட்சமாக 10 ஆண்டுகள்.
  • பிணைகள்
    உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து மீதான அடமானம் அல்லது வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தித் திட்ட குறுகிய கால கடன்கள்
  • வட்டி வீதம்
    • உற்பத்தி மற்றும் சேவைகள் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 2.5%)
    • வர்த்தகம் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 3.5%)
  • அதிகபட்ச தொகை
    மதிப்பீட்டின் மூலமாக தேவை அடிப்படையில்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    365 தினங்கள் வரை
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தித் திட்ட கடன் பத்திர வசதிகள்
  • அதிகபட்ச தொகை
    தொழிற்படு மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் அதிக பட்ச தொகை தீர்மானிக்கப்படும்.
  • பிணைகள்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணைகளும்.
  • சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்தித் திட்ட நிரந்தர மேலதிகப்பற்று வசதிகள்
  • வட்டி வீதம்
    • உற்பத்தி மற்றும் சேவைகள் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 2.5%)
    • வர்த்தகம் - (வாராந்த சராசரி நிறையிடப்பட்ட பிரதான கடன் வீதம் + 3.5%)
  • அதிகபட்ச தொகை
    தொழிற்படு மூலதன தேவைப்பாட்டின் அடிப்படையில் அதிக பட்ச தொகை தீர்மானிக்கப்படும்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
  • வருடாந்த மீளாய்வு நிபந்தனையுடன் மூன்று வருடங்களுக்கு (3 வருடங்கள்) செல்லுபடியாகும் வகையில் ரூபா 5.0 மில்லியனுக்குக் குறைவான மேலதிகப்பற்று வசதிகள்.
  • வருடாந்த மீளாய்வு நிபந்தனையுடன் ரூபா 5.0 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை 365 தினங்களுக்கு (1 வருடம்) செல்லுபடியாகும்.
வர்த்தக அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டுக் கடன் திட்டம்

புதிய தொழில்நுட்பம், இயந்திரத் தொகுதி மற்றும் பெருமளவு பால் கறக்கும் பசு இனம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு புதிதாக தேவைப்படுகின்ற மூலதனத்தை இடுவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பாற்றி, துரித வளர்ச்சிக்கு பாரியளவிலான வாய்ப்பினை பாலுற்பத்தித் தொழிற்துறை கொண்டுள்ளது. இலங்கையில் பாலுற்பத்தித் தொழிற்துறையை தனிநபர்களை பிரதானமாக கொண்ட கால்நடை தொழிற்துறை என்ற ஸ்தானத்திலிருந்து, சாத்தியமான வகையில் நடுத்தரம் முதல் பாரிய அளவிலான, வர்த்தகரீதியாக தனியார்துறையை உள்வாங்கும் பாலுற்பத்தித் தொழிற்துறையாக அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். வர்த்தக அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டுக் கடன் திட்டம் காலத்திற்கு தேவையான ஒரு முயற்சியின் அமுலாக்கமாக அமைந்துள்ளதுடன், இதன் கீழ் நடுத்தரம் முதல் பாரிய அளவிலான பாலுற்பத்தித் தொழிற்துறையின் அபிவிருத்திக்கும், வர்த்தகமயமாக்கப்பட்ட பாலுற்பத்திச் செயற்பாடுகளுக்கும் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

  • தொழிற்படும் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்களும்
  • வட்டி வீதம்
    சீரான மீள்கொடுப்பனவுக்கு வருடாந்தம் 6%
  • அதிகபட்ச தொகை
    அதிகபட்ச கடன் தொகையானது ரூபா 25 மில்லியனாகும்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    தேவைப்படும் பட்சத்தில் 12 மாதங்களுக்கான சலுகைக் காலம் உட்பட கடன் மீள்கொடுப்பனவுகளுக்கான அதிகபட்ச கால எல்லை ஆறு வருடங்களாகும்.
  • தேவையான தகமைகள்
  • கடன் பெறுனர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • தனிநபர், அல்லது பலரைக் கொண்ட குழு அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
  • பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள்.
  • பாற்பண்ணையில் குறைந்தபட்சமாக 7 பசுக்கள் இருத்தல் வேண்டும்.
  • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வியாபாரத் திட்டமொன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • வியாபாரத் திட்டம், செயற்திட்ட அறிக்கை மற்றும் வங்கியால் கோரப்படுகின்ற ஏனைய ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • செயற்திட்டத்தை இலாபகரமானதாக இயக்கும் வகையில் பாற்பண்ணைச் செயற்திட்டத்தை/பாலுற்பத்தி தொடர்பான செயற்திட்டத்தை நிர்வகித்தல் வேண்டும்.
  • வங்கியால் கோரப்படுகின்ற பிணைகளை வழங்குதல் வேண்டும்.
  • போதுமான அளவில் மீளக்கொடுப்பனவு செய்யும் ஆற்றலைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • பண வடிவில் மொத்தச் செயற்திட்டத் தொகையில் கடன்பெறுனரின் பங்களிப்பு குறைந்தபட்சம் 15% ஆக இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் எந்தவொரு நிதி நிறுவனத்திலும் வேண்டுமென்றே கடனை மீளச் செலுத்த தவறியவர்களாக இருத்தல் ஆகாது.
  • நடைமுறைச் சாத்தியமான வியாபாரச் செயற்பாட்டுடன், வங்கியின் கடன் மதிப்பீட்டிற்கு அமைவாக தகைமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  • சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு இணங்கும் கடன் திட்டத்துடன் தொடர்புபட்ட வகையிலான செயற்பாட்டில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்.
  • கடன் வழங்கப்படும் துறைகள்
  • கால்நடைகளை கொள்வனவு செய்தல்.
  • கால்நடைக் கொட்டகைகள், கட்டடங்கள், நீர்ப்பாசன முறைமை (தெளிப்பான், குழாய் விநியோகம்), கிணறு அல்லது நீர்ப்பாசனக் கிணறு அமைத்தல்
  • கால்நடைத் தீவன பயிர்ச் செய்கை.
  • புதிய பண்ணைகளை அமைத்தல்.
  • பண்ணை அபிவிருத்தி.
  • சேதனவாயு பிரிவுகளை நிர்மாணித்தல்.
  • தற்போதுள்ள பண்ணைகளை விரிவாக்கம் செய்தல்.
  • பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகளை தயாரித்தல்/பால் பதனீடு.
  • டிராக்டர், நீர்ப்பம்பு, குளிர்சாதனப்பெட்டி, பாலாடையை பிரித்தெடுக்கும் கருவி, பால் கறக்கும் இயந்திரம் மற்றும் புல்வெட்டும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல்.
  • பாலையும், பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகளையும் பேணிப் பாதுகாப்பதற்கான போக்குவரத்து மற்றும் களஞ்சிய வசதி.
  • பாலுற்பத்தி மேம்பாடு தொடர்பான நேரடி ஈடுபாடு கொண்ட வேறு எந்தவொரு புத்தாக்கமான செயற்பாடு. அல்லது திரவப்பாலை அருந்தும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.
  • உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக கால்நடை மருத்துவர்/ கால்நடை அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு புத்தாக்க முறைமைகள்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன் ஏற்பாட்டு தொகை செயற்திட்டம்
  • தொழிற்படும் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்களும்
  • வட்டி வீதம்
    இலங்கை மத்திய வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்கான சராசரி நிறையிடப்பட்ட வைப்பு வீதம் (AWDR) +3.5%
    தொழிற்படு மூலதன கடன்களுக்காக (AWDR) +3.5% (தற்சமயம் (12.54%)
    முதலீட்டு கடன்களுக்காக (AWDR) +3% (தற்சமயம் (12.04%)
  • அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தொகை
    • அதிகபட்சமாக ரூபா 50.0 மில்லியன் மற்றும் குறைந்தபட்சமாக ரூபா 500,000.
    • தனியொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களைப் பெற முடியும். எனினும் அவற்றின் மொத்தத் தொகையானது ரூபா 50.0 மில்லியன் வரை மட்டுப்படுத்தப்படும்.
  • பிணைகள்
    தனிப்பட்ட உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து அடமானம் மற்றும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.
  • தகைமைக்கான விதிகள்
  • பதிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாக இருத்தல் வேண்டும். முறையாக பதிவு செய்யப்படாத தொழில் முயற்சிகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் தமது வியாபாரத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நிறுவனப் பதிவுகள் திணைக்களம் அல்லது உள்நாட்டு அரசாங்க அதிகார சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களும் தகைமை பெறலாம்.
  • முன்பு தனிநபர் கடன் பெற்றவர்களும் முதற்தடவையாக தொழில் முயற்சியாளர்களாக மாறும் போது புதிய தொழில் முயற்சிகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
  • கடன்பெறுனர்கள் பொருளாதார மற்றும் நிதியியல் ரீதியாக நடைமுறைச் சாத்தியம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
  • கடன்பெறுனர்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அல்லது சிரேஷ்ட முகாமைத்து அதிகாரிகளுடன் தொடர்புபட்டவர்களாக அல்லது உறவுமுறையைக் கொண்டவர்களாக இருத்தல் ஆகாது.
  • கடன்பெறுனர்கள் (தாய் நிறுவனம் மற்றும் அனைத்து துணை நிறுவனங்களும்) வருடாந்த விற்பனைப்புரள்வாக ரூபா 750.0 மில்லியன் ஐ விட குறைவாகவும், உற்பத்தித்துறையை சார்ந்திருப்பின் 300 இற்கும் குறைவான ஊழியர்களையும், சேவைத் துறையை சார்ந்திருப்பின் 200 இற்கும் குறைவான ஊழியர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
  • முதலீட்டுக் கடன் - தேவைப்படின் சலுகைக் காலம் அடங்கலாக அதிகபட்சமாக பத்து வருடங்கள்.
  • இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்காக பெறப்படும் கடன்கள் அந்த இயந்திரம், உபகரணம் மற்றும் தளபாடத்தின் பாவனை ஆயுட்காலம் வரையும் அதிகபட்சமாக மீள்கொடுப்பனவுக் காலம் மட்டுப்படுத்தப்படும்.
  • தொழிற்படு மூலதனக் கடன் - அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள். எவ்விதமான சலுகைக் காலமும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
  • அதிகபட்ச சலுகைக் காலம் இரு வருடங்களாகும். (மூன்று (3) வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியைக் கொண்ட முதலீட்டுக் கடன்களுக்கு மட்டும்).
  • கடன் அங்கீகரிக்கப்படும் தொழில்துறைகள்
  • ரூ. 750 மில்லியனுக்கு குறைவான வருமானம் கொண்ட தொழில் முயற்சிகள்
  • விவசாயம்
  • விவசாயத்தை மையமாகக் கொண்ட செயற்திட்டங்கள்/ வியாபார முயற்சிகள்
  • கைத்தொழில் வியாபார முயற்சிகள்
  • வாணிப முயற்சிகள்
  • பால் மற்றும் பாலை மூலமாகக் கொண்ட உற்பத்தி தொடர்பான செயற்திட்டங்கள்
  • கால்நடை
  • அலங்கார மீன் வளர்ப்பு
  • மீன்பிடித் தொழிற்துறை
  • தகவல் தொழில்நுட்பம்
  • ஆடைத் தொழிற்துறை
  • சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் செயற்திட்டங்கள்
  • கட்டட நிர்மாணம்
  • அச்சிடல்
  • கல்வி
  • சேவை வழங்கல்கள்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம்
  • சுகாதார சேவைகள்
  • வேறு எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகள்
  • ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களை அடைப்பதற்கான கடன் வசதிகள்
ஜய இசுற கடன் திட்டம்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமே ஜய இசுற. விவசாயம், மீன்பிடி, கால்நடை, மலர்ச்செடி வளர்ப்பு, தோட்டச் செய்கை, வெளிச்ச ஏற்பாடு பொறியியல், அச்சிடல், சுற்றுலாத்துறை, கைவேலைப் பொருட்கள், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழிற்துறைப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

  • தொழிற்படும் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்களும்
  • பிணைகள்
    தனிப்பட்ட உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து அடமானம் மற்றும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.
  • வட்டி வீதம்
    • சீரான கொடுப்பனவுகளுக்கு 01.01.2018 – 31.12.2018 வரையான காலப்பகுதியில் பின்வரும் வீதங்கள் விதிக்கப்படும்.
    • சிறு தொழில் முயற்சிகள் - வருடாந்தம் 6.75%
    • நடுத்தர தொழில் முயற்சிகள் - வருடாந்தம் 10.12%
  • தகைமைக்கான விதிகள்

    சிறு தொழில் முயற்சிகள்

    • வருடாந்த விற்பனைப் புரள்வாக ரூபா 25 மில்லியன் முதல் ரூபா 250 மில்லியன் வரையான தொகையையும், 10 முதல் 50 வரையான ஊழியர்களையும் கொண்ட சிறு தொழில் முயற்சியாக இருத்தல்.

    நடுத்தர தொழில் முயற்சிகள்

    • வருடாந்த விற்பனைப் புரள்வாக ரூபா 250 மில்லியன் முதல் ரூபா 750 மில்லியன் வரையான தொகையையும், 51 முதல் 300 வரையான ஊழியர்களையும் கொண்ட சிறு தொழில் முயற்சியாக இருத்தல்.
  • கடன் வழங்கப்படும் துறைகள்

மேற்குறிப்பிட்ட இரு பிரிவுகளின் கீழும் குறிப்பாக பின்வரும் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு இக்கடன்திட்டம் கருத்தில் கொள்ளப்படுகின்றது:

  • விவசாயம்
  • மீன்பிடி
  • கால்நடை
  • மலர்ச்செடி வளர்ப்பு
  • தோட்டச் செய்கை
  • வெளிச்ச ஏற்பாடு பொறியியல்
  • அச்சிடல்
  • சுற்றுலாத்துறை
  • கைவேலைப் பொருட்கள்
  • ஆடை
  • தகவல் தொழில்நுட்பம்
  • உற்பத்தித் துறைப் பிரிவுகள்

(முதலீட்டு நோக்கங்கள் மற்றும் தொழிற்படு மூலதன பாகங்கள் ஆகியன ஒன்றிணைந்த முதலீட்டு நோக்கங்கள் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக கருத்தில் கொள்ளப்படும்.)

  • அதிகபட்ச தொகை
  • சிறு தொழில் முயற்சிகள்
  • உள்நாட்டுச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 50.0 மில்லியன்.
  • ஏற்றுமதிச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 100.0 மில்லியன்.
  • நடுத்தர தொழில் முயற்சிகள்
  • உள்நாட்டுச் சந்தைக்கு உற்பத்திகள்/சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 200.0 மில்லியன்.
  • ஏற்றுமதிச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 400.0 மில்லியன்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
  • முதலீட்டுக் கடன்
  • அதிகபட்சமாக ஒரு வருட சலுகைக் காலம் அடங்கலாக அதிகபட்சமாக 5 ஆண்டுகள்.
  • தொழிற்படு மூலதனக் கடன்
  • அதிகபட்சமாக 3 ஆண்டுகள். சலுகைக் காலம் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
  • பிணைகள்
  • தனிப்பட்ட உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து அடமானம் மற்றும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.
மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

திலின வீரசேகர
உதவி முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
தொலைபேசி - 011-2481356
மின்னஞ்சல் - thilinaw@peoplesbank.lk

 

மிஹிரவி வீரரத்ன
உதவி முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
தொலைபேசி - 011-2421501
மின் அஞ்சல் - sme1@peoplesbank.lk

 

தசுனி பசன்சி
உதவி முகாமையாளர் - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
தொலைபேசி - 011-2421501
மின் அஞ்சல் - sme@peoplesbank.lk

top