தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

சேமிப்புக் கணக்குக்கான நியதிகளும் நிபந்தனைகளும்
  1. நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு உரிய ஆரம்ப வைப்புத் தொகைகள் கிளைக்குக் கிளை மாறுபடும். கணக்கை ஆரம்பிக்க உத்தேசிக்கும் வாடிக்கையாளர்; அது குறித்துக் கேட்கும் சந்தர்ப்பத்தில் ஆரம்ப வைப்புக்கு உரிய தொகை அறிவிக்கப்படும்.
  2. அ. கொடுக்கல் வாங்கல் செய்வதற்கான நேரங்கள், அந்தந்த கிளைகளினால் தெரிவிக்கப்படும் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கான நேரங்களாக அமையும்.
    ஆ. நடைமுறைக் கணக்கு நிலுவைகளுக்காக வட்டி செலுத்தப்பட மாட்டாது.
  3. காசோலைப் புத்தகங்கள் (அரசாங்கத்தினால் அவ்வப்போது செலுத்தப்படும் வரிகள், எம்.ஐ.சி.ஆர். கட்டணங்கள் தவிர) இலவசமாக விநியோகிக்கப்படும். மேலும், காசோலைகள் தவிர வேறொரு முறையில் பணம் வழங்க மறுப்புத் தெரிவிப்பதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது.
    காசோலைகளைப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு வாடிக்கையாளர்கள் வேண்டப்படுகின்றனர்:
    அ. காசோலைப் புத்தகங்கள், அதிகாரம் அளிக்கப்படாத எவரேனும் ஆளொருவரின் கையில் சேர்வதற்கு இடமளித்தல் ஆகாது. வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகம்/ புத்தகங்களைக் கையாள்வது தொடர்பில் அல்லது வேறு வகையில் இடம்பெற்ற கவனயீனம் காரணமாக போலிக் கையொப்பம்/ கையொப்பங்கள் இடப்பட்ட ஒரு காசோலை சார்பாக பணம் செலுத்தப்படுமிடத்து அதற்கான பொறுப்பை வங்கி ஏற்க மாட்டாது.
    ஆ. காசோலைப் புத்தகங்களில் கையொப்பம் இடும்போது வங்கியில் வைக்கப்பட்டுள்ள மாதிரிக் கையொப்பப் பத்திரத்தில் உள்ள கையொப்பத்துக்கு நிகரான வகையில் கையொப்பங்கள் அமைந்திருத்தல் வேண்டும்.
    இ. காசோலைகளை வரையும் போது எழுத்திலும், இலக்கத்திலும் தொகையை ஒரே மொழியில் தெளிவாகக் குறிப்பிடுவதுடன் இலக்கங்களுக்கும் எழுத்துக்களுக்குமிடையில் எதாவது உட்சேர்த்தல் மேற் கொள்ளக் கூடியவாறு இடைவெளிகள் விடுதல் ஆகாது.
    ஈ. காசோலையொன்றில் ஏதும் திருத்தத்தைச் செய்ய வேண்டியிருப்பின், அத்தகைய திருத்தம் சரியானது என்பதை பிறப்பித்தவரின் முழுமையான கையொப்பத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
    உ. கொடுப்பனவுக்காக முன்வைக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு/ அதற்குக் கூடுதலான காலத்திற்கு முன்னைய ஒரு திகதியைக் கொண்ட காசோலைகளுக்காகப் பணம் செலுத்துவதை வங்கி மறுக்கலாம்.
    ஊ. தம்வசமுள்ள காசோலைப் புத்தகம் அல்லது அதில் ஒரு தாள் காணாமல் போனால், அது குறித்து உடன் வங்கிக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
  4. பின்வரும் விடயங்கள் மீது நன்கு கவனம் செலுத்துமாறு வாடிக்கையாளர்கள் வேண்டப்படுகின்றனர்:
  5. அ. தமது வங்கிக் கணக்கு சார்பாக ஒவ்வொரு கொடுப்பனவுக்காகவும் அதற்கான அடியிதழில் அல்லது பற்றுச்சீட்டில் வங்கியின் அதிகாரம் பெற்ற முகவர்; ஒருவரின் முழுமையான கையொப்பத்தை பெறுதல். கணனி அச்சிடப்பட்ட பற்றுச் சீட்டொன்றாயின், அத்தகைய கையொப்பம் அவசியப்பட மாட்டாது.
    ஆ. தீர்வையாகாத வரவுச் சீட்டுக்களின் பேரில் பிறப்பிக்கப்படும் காசோலைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வங்கி பொறுப்பு வகிக்க மாட்டாது.
  6. அ. வாடிக்கையாளர்களினால் பணம் மீளப் பெறப்படும்போது, முன் ஏற்பாடுகளைச் செய்து கொள்ளாமல் கணக்கிலுள்ள நிலுவைக்கு மேலதிகமாக வரையக் கூடாது.
    ஆ. கணக்கிலுள்ள நிலுவையைக் கருத்திற் கொண்டு காசோலைகளை வரையூம்போது, வாடிக்கையாளரால் பிறப்பிக்கப்பட்டவிடத்தும், அது வரையில் கொடுப்பனவுக்காக வங்கிக்குச் சமர்ப்பிக்கப்படாத சகல காசோலைகளினதும் பெறுமதியைக் கழித்த பின்னர் தேறும் நிலுவைக்காக மாத்திரம் காசோலைகள் வரையப்படுதல் வேண்டும்.
    இ. வங்கியினால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் அமைப்பு விதிகளுக்கும், இந்தச் சட்ட விதிகளுக்கும் முரணாகப் பிறப்பிக்கப்படும் காசோலைகளுக்குப் பணம் செலுத்துவதை மறுப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
  7. வைப்பில் இடப்பட்ட காசோலைகள் தீர்வையாகாதுள்ளமை பற்றி காலம் தாழ்த்தி அறிந்து கொள்ளுமிடத்து, அத்தகைய தீர்வையாகாத காசோலைகள் தொடர்பாக கணக்குக்கு வரவு வைத்த தொகையை நிலுவையிலிருந்து கழிப்பதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது.
  8. நடைமுறைக் கணக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கியினால் மாதாந்த கணக்குக் கூற்றொன்று அனுப்பி வைக்கப்படும். அந்தக் கூற்று கிடைக்கப் பெற்றதும் அதனை நன்கு பரீட்சித்து, அதில் ஏதும் ஒரு தவறை அல்லது வேறுபாட்டை அவதானித்தால், அது குறித்து வங்கிக்கூற்று கிடைத்து 14 நாட்களுக்குள் வங்கியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
  9. நம்பிக்கைப் பொறுப்புக்கள் வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  10. தேவையான சந்தர்ப்பங்களில் வங்கியினால் கட்டணங்கள் அறவீடு செய்யப்படும். கணக்கில் பணம் இன்மையால் திருப்பியனுப்பப்பட்ட காசோலைகளுக்காக கட்டணங்கள் அறவீடு செய்யப்படும். அத்துடன், வாடிக்கையாளர்களின் அறிவூறுத்தல்களின் பிரகாரம், கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் காசோலைகள் சார்பாக கட்டணம் அறவீடு செய்யப்படும். காசோலை ஒன்றிற்காக பணம் செலுத்துவதை நிறுத்துமாறு பிறப்பித்தவரிடமிருந்து கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்கள் குறித்துக் கொள்ளப்படும். எனினும், அத்தகைய அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுமிடத்து வங்கியினால் அதற்கான பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது.
  11. இந்த அமைப்பு விதிகளை மாற்றியமைத்தல், திருத்தியமைத்தல் அல்லது சேர்த்துக் கொள்ளல் என்பவற்றுக்கான உரிமை வங்கியின் வசமுள்ளது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட, திருத்தியமைக்கப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட அமைப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டவுடன் அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படினும் அறிவிக்கப்படாவிடினும் அவர்கள் அனைவரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். குறிப்பிட்டுள்ள விதிகளை வாசித்துப் புரிந்து கொண்டதுடன், அதன்படி ஒழுகுவதற்கு உடன்படுகின்றேன்/ உடன்படுகின்றோம்.
நிலையான வைப்புக் கணக்குக்கான நியதிகளும் நிபந்தனைகளும்
  1. கணக்கு ஆரம்பிக்கப்படும் நேரத்தில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு முரணாக வைப்பீடு செய்பவரால் குறைந்தபட்சம் வைப்பீட்டுத் தவணை முடிவடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னராவது வங்கிக்கு எழுத்து மூலம் அறிவுறுத்துதல்கள் கொடுக்கப்பட்டாலன்றி, வங்கியின் தற்றுணிபின்படியும் மக்கள் வங்கியால் காலத்துக்குக்காலம் விதித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கமையவும் (வட்டி வீதம் உட்பட) வட்டியூடன் / வட்டியின்றி நிலையான வைப்பீட்டைப் புதுப்பிக்கும் அதிகாரம் வங்கிக்கு உண்டு.
  2. ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட காலப் பகுதி முடிவடைய முன்னர் வைப்பீட்டாளர் வைப்பீட்டை மீளப்பெறும் பட்சத்தில் வைப்பீட்டுத் தவணை முடிவடைவதற்கு முன்னர் மீளப்பெறப்படும் வைப்பீடுகளுக்கு மக்கள் வங்கியால் விதிந்துரைக்கப்பட்ட குறைந்த வீதப்படி மட்டுமே வைப்பீட்டாளருக்கு வட்டி செலுத்தப்படும். முழுத் தவணைக்கும் உடன்பட்டிருக்கும் மாத வட்டி பெறும் வைப்புக்களை, தவணைக் காலம் முடிவதற்கு முன்னர் மீளப் பெற்றுக் கொண்டால், பெறப்பட்டிருக்கும் கூடுதலான வட்டியை முதலின் தொகையிலிருந்து அல்லது அத்தகைய மீளப் பெறுதலின் நேரத்தில் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் மீதி வட்டியிலிருந்து கழிப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.
  3. கூட்டாக கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் மரணமடையுமிடத்து அந்த வைப்புகளில் மரணமடைந்தவருக்கு இருந்த எல்லா உரிமைகளுக்கும் (காலத்துக்குக்காலம் நியதிச் சட்ட அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கமைய) உயிர் வாழ்பவர் உரித்துடையவராவார்.
  4. தனி ஆட்களின் கணக்குகளில், கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் 544 ஆம் பிரிவின் கீழ் நியமனதாரர் ஒருவரை நியமித்திருக்காவிடின் இறந்தவரின் சட்டபூர்வமான மரபுரிமையாளார், இறந்தவரின் உரிமைகளுக்கு உரித்துடையவராவார்.
    இது சம்பந்தமான நியமனங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவ இலக்கம் 1510 ஐ சமர்ப்பிப்பதன் மூலம் செய்யப்படல் வேண்டும்.
  5. பௌத்த மதகுருவாயின் பெயர்குறித்த ஒருவரை நியமனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
  6. கூட்டு கணக்கு தொடர்பில் அனைத்து கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் மரணித்தால் மாத்திரம் பெயர் குறித்து ஒருவர் நியமிக்கப்பட்டதை நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மரணித்தால் பெயார்குறித்து நியமிக்கப்பட்டதைப் பொருட்படுத்தாமல் உயிருடன் உள்ள கணக்கு வைத்திருப்பவருக்கு/ வைத்திருப்பவர்களுக்கு கணக்கின்/ கணக்குகளின் முழுத்தொகை/ காப்பறை வைப்புகள் உரித்தாகும்.
  7. நிலையான வைப்பு பற்றுச் சீட்டு தொலைந்தது சம்பந்தமாக வங்கிக்கு உடனடியாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
  8. வைப்பீட்டாளர் ஒருவர் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வரியிறுப்பாளரின் பிரிவிற்குட்படும் பட்சத்தில் அத்தகைய தகவல் உடனடியாக வங்கிக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
பீபள்ஸ் வீசா சா;வதேச டெபிட் அட்டை உhpமையாளா;களின் பிரகடனம்
  1. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை எல்லா நேரங்களிலும் மக்கள் வங்கியின் ஆதனமாக இருத்தல் வேண்டும் என்பதுடன் வங்கியின் வேண்டுகோளின்போது நிபந்தனையின்றியும் உடனடியாகவும் வங்கிக்குத் திருப்பிக்கொடுக்கப்படுதலும் வேண்டும்.
  2. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை எனது தனிப்பட்ட பாவனைக்கு மாத்திரமே. அது கைமாற்றப்படமுடியாதது. அது வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்குத் தவிர வேறு ஏதேனும் நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படமுடியாது.
  3. நான்/ நாம் எனது/எமது தனிப்பட்ட அடையாள இலக்கத்தை (PIN) கண்டிப்பாக அந்தரங்கமாக வைத்திருப்பேன்/போம். அத்துடன் அத்தகைய இலக்கத்தை எந்தவொரு நேரத்திலும் வேரொருவருக்கு வெளிப்படுத்தாதிருப்பதனையும் உறுதியளிக்கின்றேன்/கின்றோம். பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை தொடர்பில் ஆ.ஆ.இ. (PIN) என்பது வங்கியால் எனக்கு/ எமக்கு அந்தரங்கமாக உண்டுபண்ணப்பட்ட மூல ஆளுக்குரிய அடையாள இலக்கம் எனவும் என்னால்/ எம்மால் பயனுறுத்தப்பட்ட ஏதேனும் பதிலீடு எனவும் பொருள்கொள்ளப்படும்.
  4. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அல்லது பயனுறுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் அவை எவ்வாறு பயனுறுத்தப்பட்டிருப்பினும் நான்/ நாம் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்/ றோம்.
  5. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் PIN இலக்கத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மீளப்பெறுதலின் கைமாற்றற் கொடுப்பனவில் தொகையை எனது/எமது கணக்கில் பற்றுவைப்பதற்கு இத்தால் தங்களுக்கு அதிகாரமளிக்கின்றேன்/றோம்.
  6. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை அல்லது ஏற்புடைத்தானவிடத்து வேறு ஏதேனும் உள்ளூர் வலையமைப்புக்கள் ஊடாக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான எல்லா அறவீடுகளையும் அத்துடன் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாடு தொடர்பில் சட்டக் கட்டணங்கள் அல்லது வேறு நியதிச் சட்ட அறிவீடுகள் எவையுமிருப்பின் அவை உட்பட வேறு எவையேனும் பொறுப்புகளையும் எனது/ எமது கணக்கில் பற்றுவைப்பதற்கு நான்/ நாம் இத்தால் தங்களுக்கு மேலும் அதிகாரமளிக்கின்றேன்/றோம்.
  7. எனது/ எமது கணக்கு ஒரு கூட்டுக் கணக்காக இருப்பின் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாட்டினின்றெழும் எல்லாக் கொடுக்கல் வாங்கல்களுக்கு நான் நாம் ஒருமித்தும் தனித்தனியாகவும் பொறுப்புடையவராவேன்/வோம்.
  8. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் மூலம் முறைவழிப்படுத்தப்பட்ட எல்லாக் கொடுக்கல் வாங்கல்களையும் பற்றிய வங்கியின் பதிவேடுகளையும் கூற்றுக்களையும் எல்லா நோக்கங்களுக்காகவும் முடிவுகளுக்காகவும் என்னை/எம்மைப் பொறுப்பாக்கும் என்பதனை நான்/நாம் ஏற்றுக்கொள்கின்றேன்/றோம்.
  9. என்னால்/எம்மால் பெறப்பட்ட பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை களவு போயின் அல்லது காணாமற்போயின் நான்/நாம் உடனடியாக வங்கிக்கு அறிவிப்பேன்/போம் என்பதுடன் வங்கிக்கு எழுத்திலான உறுதிப்படுத்துகையொன்றையும் வழங்குவேன்/வோம். காணாமற்போன, களவுபோன அல்லது எனது/எமது அதிகாரமின்றி பயன்படுத்தப்பட்ட பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பயன்பாட்டால் ஏற்படும் ஏதேனும் இழப்பிற்கு நான்/நாம் வங்கியைப் பொறுப்பாளியாக்கமாட்டேன்/டோம்.
  10. வங்கிக்கு அதன் ஏக தீர்மானத்தின்படி இந்த நியதி நிபந்தனைகளுள் எதனையும் ஏதேனும் நேரத்தில் எனக்கு/எமக்கு அறிவித்தலுடனோ அறிவித்தலின்றியோ திருத்துவதற்கான, குறைநிரப்பு செய்வதற்கான அல்லது வேறுபடுத்துவதற்கான உரித்துடையதாதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய திருத்தம், குறைநிரப்புதல் அல்லது வேறுபடுத்துகை என்னை/ எம்மைப் பொறுப்பாக்கும்.
  11. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டை அப்போதைக்கு வலுவிலுள்ள விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையால் வழங்கப்படும் எல்லாச் சேவைகளையும் வசதிகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் அல்லது வேறுவகையில் பின்வருவனவற்றை ஆளுகை செய்யும் எவையேனும் நியதி நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்.

    மிகுதி பற்றிய விசாரணை
    PIN மாற்றம்
    பணம் மீளப்பெறுதல்
    POS ஊடாக கொடுக்கல் வாங்கல் செய்தல்

  12. எனக்கு/எமக்கு எதேனும் முன்னறிவித்தலின்றி அல்லது எவையேனும் காரணங்கள் காட்டாமல் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையை ரத்துச்செய்வதற்கான, மீளப்பெறுவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான முழு உரிமையும் வங்கிக்கு இருத்தல் வேண்டும். நான்/நாம் பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் பாவனையை முடிவுறுத்தத் தீர்மானிக்கும்பட்சத்தில் நான்/நாம் வங்கிக்கு 7 நாட்களுக்குக் குறையாத எழுத்திலான முன்னறிவித்தல் கொடுத்து பீபள்ஸ் வீசா அட்டையைத் திருப்பிக்கொடுக்க உடன்படுகிறேன்/றோம்.
  13. பீபள்ஸ் வீசா இலத்திரன் அட்டையின் எல்லா மாற்றீடுகளும் புதுப்பித்தல்களும் வலுவிலுள்ள நியதி நிபந்தனைகளுக்கு அமைந்தனவாதல் வேண்டும்.
  14. எத்தன்மையதுமான ஏதேனும் காரணங்களுக்காக அட்டை செல்லுபடியற்றதாக்கப்பட்டமைக்கு வங்கி பொறுப்பாளியாகமாட்டாது.
  15. மீளப்பெறுதலை அல்லது கைமாற்றத்தை ஈடுசெய்வதற்கு எனது/எமது கணக்கில் போதியளவு பணம் இருந்தாலன்றி நான்/நாம் ஏதேனும் நேரத்தில் அட்டையைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த எத்தனிக்கவோ மாட்டேன்/டோம்.
  16. ATM திரையில் அல்லது அச்சிடப்பட்ட விசாரணைச்சிட்டையில் அல்லது பற்றுச்சீட்டுப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட தொகை எத்தன்மையதான ஏதேனும் நோக்கத்திற்கு வங்கியுடனான எனது/எமது கணக்கின் முடிவான நிலைமையாகமாட்டாது என்பதனை நான்/நாம் ஒப்புறுதி செய்கின்றேன்/றோம்.
  17. அட்டையின் அல்லது ATM பொறியின் ஏதேனும் பிறழ்வுச் செயற்பாட்டினால் அல்லது செயலிழப்பினால் அல்லது ATM பொறியில் பணம் போதாமையால் ஏற்படும் எத்தன்மையதுமான ஏதேனும் இழப்பிற்கு அல்லது சேதத்திற்கு நான்/நாம் வங்கியை ஆளாக்கவோ பொறுப்பாளியாக்கவோ அல்லது கணக்குக்காட்டும் பொறுப்பிற்கு உட்படுத்தவோ மாட்டேன்/மாட்டோம்.
  18. நடைமுறை, சேமிப்பு அல்லது வேறு ஏதேனும் கணக்கை ஆளுகை செய்யும் எல்லா விதிகளும் ஒழுங்குவிதிகளும் அத்தகைய கணக்குகள் தொடர்பிலான அட்டைக் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடயனவாதல் வேண்டும்.
  19. நான்/நாம் பீபள்ஸ் வீசா கடனட்டையை வெளிநாடொன்றில் உபயோகிக்கும்போது, வங்கியினால் வழங்கப்பட்டுள்ள கடன் எல்லைக்குட்பட்ட தொகைக்கு மாத்திரமே கொள்வனவு செய்வதென்பதை உறுதிப்படுத்துவதோடு, பிரயாணச்செலவு, ஹோட்டல் செலவு, கூடுதலாக ஏற்பட்டசெலவு, வைத்திய செலவு மற்றும் தனிப்பட்ட பாவனைக்காக பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு போன்றவற்றிற்கு மாத்திரம் வெளிநாடுகளில் கடனட்டையை உபயோகப்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றேன்/ உறுதிப்படுத்துகின்றோம். பாரிய அளவிலான பணக்கொடுக்கல் வாங்கல்கள், வியாபார நோக்குடனான கொள்வனவுகள் மற்றும் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றிற்காக நான்/ நாம் கடனட்டையை உபயோகிக்க மாட்டேன்/ மாட்டோம். மேலும் எனக்காக/ எமக்காக அல்லது மூன்றாவது கட்சிக்காரருக்காக கடனட்டையை உபயோகித்து வியாபார அளவில் பொருட்களைக் கொள்வனவு செய்ய அல்லது இலங்கைக்கு அப்பால் வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ள/ மூலதன மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன்/ மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்/ படுத்துகின்றோம்.
  20. இலத்திரனியல் பணமாற்ற அட்டைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மற்றும் வெளியிடப்படவுள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட நான்/ நாம் இணக்கம் தெரிவிக்கின்றேன்/ தெரிவிக்கின்றோம்.
  21. இவ் அட்டை காணாமல் போகுமிடத்தும் மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் சர்ச்சைகள் சம்பந்தமாக எழும் கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை வங்கியினால் காலத்திற்கு காலம் தீர்மானிக்கப்படும் வீதங்களின் படி செலுத்துவதற்கு சம்மதிக்கின்றேன்/ சம்மதிக்கின்றோம்.
  22. நான்/ நாம் வெளிநாட்டில் அட்டையைப் பாவிக்க எண்ணுவதாயின் அது பற்றி வங்கிக்கு நாட்டை விட்டு வெளியேற முன்பதாக வங்கிக்கு அறிவிக்க சம்மதிக்கின்றேன்/ றோம்.
இப் பிரகடனம் இலங்கை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்படுகின்றது.

....................................................................................................... அடிப்படை அட்டை உரிமையாளர்/ மேலதிக அட்டை உரிமையாளர்................................................................................................... ஆகிய நான்/ நாம் இப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் இத்தால் பிரகடனப்படுத்துகிறேன்/ கிறோம்.

செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2005 செப்டம்பர் 19ஆம் திகதியிட்ட 1411/5 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அந் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கலுக்கு அட்டையைப் பயன்படுத்த முடியும் என்பதை விளங்கிக் கொண்டோம் என்பதை நான்/ நாம் இத்தால் உறுதிப்படுத்துகிறேன்/கிறோம். அத்துடன் அந் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக மேலும் உடன்படுகிறேன்/ கிறோம்.

எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி நான்/ நாம் மேற்கொள்கின்ற அந்நிய செலாவணி பரிமாற்றல் தொடர்பாக செலாவணி சட்டங்களின் நோக்கங்களின் பொருட்டு மற்றும் மக்கள் வங்கிக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக எந்தவொரு தகவலையும் வழங்க கட்டுப்படுவதாக மேலும் இத்தால் உடன்படுகிறேன்/ கிறோம்.

நான்/ நாம் வெளிநாட்டு தொழிலில் ஈடுபடுவதற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அல்லது குடியகல்வதற்கு முன்னர் எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையை/ அட்டைகளை மக்கள் வங்கியிடம் ஒப்படைப்பதற்கு உடன்படுவதாக நான்/ நாம் மேலும் இத்தால் உடன்படுகிறேன்/ கிறோம்.

எனக்கு/ எமக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி அனுமதிக்கப்படாத அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதாக சந்தேகிப்பதற்கு போதுமானளவு காரணிகள் இருப்பதாக தெரியவருமானால் அந்த இலத்திரனியல் பணமாற்ற அட்டை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்நிய செலாவணியை அதிகாரம் பெற்ற முகவரி (வங்கி) இடைநிறுத்த முடியும் என்பதை நான்/நாம் அறிவேன்/வோம்.

...........................................................................                                         ......................
அடிப்படை அட்டை உரிமையாளரின் கையொப்பம்     திகதி

...........................................................................                                    ......................
மேலதிக அட்டை உரிமையாளரின் கையொப்பம்     திகதி

நான் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் என்றவகையில் விண்ணப்பதாரர்/ விண்ணப்பதாரர்கள் வழங்கியுள்ள தகவல்களையும் அதனோடு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் மிகக் கவனமாகப் பரிசீலித்தேன். அத் தககவல்களும் ஆவணங்களும் சரியென்பதை உறுதிசெய்கின்றேன். இலத்திரனியல் பணமாற்ற அட்டை உரிமையாளர்கள் அவர்களுடைய அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கவனமாக இருப்பேன் என உறுதிசெய்கிறேன். அத்துடன் அட்டை உhpமையாளர்/அட்டை உரிமையாளர்கள் வழங்குகின்ற வாக்குறுதியை மீறி இலத்திரனியல் பணமாற்ற அட்டையைப் பயன்படுத்தி அதன்மூலம் அனுமதிக்கப்படாத அந்நிய செலாவணி கொடுக்கல் வாங்கல் இடம்பெறுகின்றது என சந்தேகிப்பதற்குப் போதுமானளவு காரணிகள் இருப்பதாக தெரியவருமானால் அந்த இலத்திரனியல் பணமாற்ற அட்டை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்நிய செலாவணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் அத்தகைய மீறல் தொடர்பான விடயத்தை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

....................       ...................................................
திகதி           அதிகாரம் பெற்ற உத்தியோகத்தரின் கையொப்பம்

top