தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

புதிய விரிவான கிராமப்புறக் கடன் திட்டம்

பருவப் (குறுகிய கால) பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள நுண் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளுக்கு குறைந்த செலவில் தொழிற்படு மூலதனத் தேவைகளுக்கு நிதியுதவியளித்து, அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை தரமுயர்த்தும் பிரதான நோக்கத்துடனேயே புதிய விரிவான கிராமப்புற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
    அனைத்து மாவட்டங்கள் 
  • கடன் வழங்கப்படும் துறைகள்
    நெல், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், மரக்கறி வகை, பருப்பு வகை, சோயா அவரை, ஏனைய வேர் மற்றும் கிழங்கு வகை, சோளம், இஞ்சி, எண்ணெய் விதைகள், கரும்பு மற்றும் ஏனைய வேளாண்மை பயிர்கள். 
  • வட்டி வீதம்
    7%
  • அதிகபட்ச தொகை
    ரூபா 500,000/- 
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்சம் - 270 தினங்கள் 
  • உத்தரவாதம்
    இரு விவசாயிகளிடமிருந்து இடை உத்தரவாதம் அல்லது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஏனைய உத்தரவாதங்கள்
சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II – கடன் திட்டம்

நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்கையை பூர்த்தி செய்து பயிற்சி பெற்று வெளியேறுகின்ற இளைஞர்,யுவதிகள் தமக்கென சொந்தமாக சுயதொழில் செயற்திட்டங்களை ஸ்தாபித்துக்கொள்ள நிதியுதவி அளிக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமே சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II கடன் திட்டமாகும்.

  • தொழிற்பாட்டுப் பிராந்தியம்
    அனைத்துப் பிராந்தியங்கள்
  • வட்டி வீதம்
    7%
  • அதிகபட்ச கடன் தொகை
    ரூபா.500,000/- 
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    6 மாத கால சலுகைக் காலம் அடங்கலாக அதிகபட்சமாக 5 வருடங்கள்
  • உத்தரவாதம்
    தனிப்பட்டரீதியில் உத்தரவாதமளிப்பவர்கள்/அசையா சொத்து/அசையும் சொத்து போன்ற வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற எந்தவொரு உத்தரவாதம்.
  • கடன் பெறுவதற்கு தகைமை உள்ளவர்கள்

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றில் தேசிய தொழிற்தகைமை நிகழ்ச்சித்திட்டம் (National Vocational Qualification -NVQ) அல்லது வேறு வகையிலான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தொழில் முயற்சி திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை பூர்த்தி செய்துள்ளவர்களாக கடன்பெறுனர்கள் இருத்தல் வேண்டும். அத்துடன்,

  • உத்தேசிக்கப்பட்ட தொழில்முயற்சியை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான இடத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • வங்கியின் மதிப்பாய்வு மற்றும் அங்கீகாரத்திற்காக வியாபாரத் திட்டமொன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி கட்டம் II கடன் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
திரி சவிய கடன் திட்டம்

கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறு அளவிலான வியாபாரிகளை வலுப்படுத்தி, கோழித் தொழிற்துறைக்கான சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தும் முகமாகவே திரி சவிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • தொழிற்பாட்டு மாவட்டங்கள்
    அனைத்து மாவட்டங்கள்
  • கடன் வழங்கப்படும் துறைகள்
    புதிதாக சுய தொழில் வியாபாரிகளாக மாறுபவர்கள் குளிரூட்டல் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு.
  • வட்டி வீதம்
    0%
  • அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
    வரையறை கிடையாது
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்சம் 4 ஆண்டுகள்
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும் உத்தரவாதம்
  • பெற்றுக்கொள்வதற்கான தகைமை
  • கடன் பெறுபவர் அரச துறை ஊழியராகவோ, தனியார் துறை ஊழியராகவோ, ஏனைய வேலைவாய்ப்புத் துறையில் முழு நேர/பகுதி நேர ஊழியராகவோ, மற்றொரு நாட்டின் பிரஜையாகவோ அல்லது வெளிநாட்டில் வசிப்பவராகவோ இருத்தல் ஆகாது.
  • கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் செல்லுபடியாகும் வர்த்தக பதிவு மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கத்துவம் ஆகிய சான்று ஆவணங்களை வழங்கல் வேண்டும்.
கொவி நவோத கடன் திட்டம்

விவசாய நடவடிக்கைகளை இயந்திரமயமாக்கி, புதிய நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகளைப் பிரயோகித்து தமது பிழைப்பிற்கான மட்டத்திலிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் கால்பதிக்கும் நிலைமட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் உயர்வதற்காக வாய்ப்புக்களை வழங்கி அவர்களுக்கு உதவும் முகமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • தொழிற்பாட்டு மாவட்டங்கள்
    அனைத்து மாவட்டங்கள்
  • கடன் வழங்கப்படும் துறைகள்
    விவசாய நடவடிக்கைகளை இயந்திரமயப்படுத்துவதற்குத் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக.
  • தேவையான தகைமை
    கடன் பெறுபவர் அரச துறை ஊழியராகவோ, தனியார் துறை ஊழியராகவோ, ஏனைய வேலைவாய்ப்புத் துறையில் முழு நேர/பகுதி நேர ஊழியராகவோ, மற்றொரு நாட்டின் பிரஜையாகவோ அல்லது வெளிநாட்டில் வசிப்பராகவோ இருத்தல் ஆகாது.
  • வட்டி வீதம்
    3.27%
  • அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
    ரூபா 500,000/- 
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்சம் 5 ஆண்டுகள்
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தரவாதம்
top