நிறுவனம் ஒன்றின் பங்குகள் பொதுமக்களுக்கு முதற்தடவையாக விநியோகிக்கப்படும் நிகழ்வு ஆரம்ப பொது வழங்கல் எனப்படுகின்றது. பொதுவாக சிறு அளவிலான அல்லது ஆரம்ப கட்ட நிறுவனங்கள் தம்மை விஸ்தரிப்பதற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டும் நோக்கில் ஆரம்ப பொது வழங்கலை விநியோகிக்கின்றன. எனினும் தனியார் உரிமையாண்மையின் கீழான பெரும் நிறுவனங்களும் பகிரங்க வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆரம்ப பொது வழங்கலை விநியோகிக்கின்றன.
உரிமைப் பங்கு வழங்கல்
தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு அவர்கள் தற்போது கொண்டுள்ள பங்குகளின் எண்ணிக்கை வீதத்தில்இ குறிப்பிட்ட விலைப் பெறுமானத்தில் புதிய பங்குகளை வழங்குதல்.