தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

கடல்கடந்த நாடுகளில் தீவிரமான வியாபார முயற்சிகளை முன்னெடுக்கின்ற பல ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான சேவைகளை வாணிப நிதி வழங்கல் பிரிவு வழங்கி வருகின்றது. 110 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 1000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிர்வாக வங்கிப்பிரிவுகளை உள்ளடக்கிய மக்கள் வங்கியின் வலையமைப்பானது உங்களது வியாபாரத்திற்கு அதி நவீன தொழில்நுட்பம், தீவிர அர்ப்பணிப்பு மற்றும் உயர் பெறுமானம் கொண்ட கொடுக்கல்வாங்கல்களை கையாளுவதில் பல தசாப்தங்களுக்கும் மேலான அதிசிறந்த அனுபவத்தையும் சர்வதேசரீதியில் போட்டித்திறனையும் வழங்குகின்றன. வாடிக்கையாளரின் பெறுமானத்தை மேம்படுத்தி, சர்வதேச வர்த்தகக் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளில் விரைவாக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள உதவி செய்வதும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்குவதுமே எமது முதன்மையான நோக்கமாகும்.

உங்களது வாணிப அனுசரணையாளராக மக்கள் வங்கியின் பங்கு

மக்கள் வங்கியானது ஒரு அரசாங்க வங்கி என்ற வகையில் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் கடல் கடந்த நாடுகளில் தமது வர்த்தக முயற்சிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்துள்ள நிறுவன மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களின் பரஸ்பர நலனுக்காக கடந்த 50 ஆண்டுகளாக சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவு நிதியியல் தீர்வுகளை வழங்கி வந்துள்ளது. மேன்மையில் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஒரு வங்கி என்ற வகையில் பின்வரும் சேவைகளை வழங்குவதன் மூலமாக சர்வதேச சந்தையில் வர்த்தக நிறுவனங்கள் வளமான பெறுபேறுகளை ஈட்டுவதற்குத் தேவையான அறிவு, அனுபவம் மற்றும் ஆதரவை நாம் வழங்கி வருகின்றோம:

  • சர்வதேச வாணிப கடனுக்கு அனுசரணையளிப்பதற்காக 110 நாடுகளில் 1000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிர்வாக வங்கிப் பிரிவுகளுடன் சர்வதேச வலையமைப்பை அடையப் பெறும் வசதி.
  • தொழிற்துறையில் மிகவும் சிறந்த மற்றும் நெகிழ்வுப்போக்குடைய நாணய மாற்று மற்றும் வட்டி வீதங்கள்.
  • நாடெங்கிலும் வியாபித்துள்ள 737 கிளைகளைக் கொண்ட அதி விசால வலையமைப்பின் மூலமாக கிடைக்கப்பெறும் மத்திய பிரதான சேவை.
  • வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு ஆலோசனை சேவைகள்.
  • மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் இணைய வங்கிச்சேவை மூலம் இலகுவாக அடையப்பெறல்.
  • வாடிக்கையாளரின் அவசர கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய குறுகிய காலத்தில் விரைவான பதில் செயற்பாடு.
  • சுங்கத் தீர்வை/வரிகள் மற்றும் துறைமுக கட்டணங்கள்/அறவீடுகளுக்கு இணையத்தளத்தின் வாயிலான கொடுப்பனவு சேவை.
  • சிறந்த வீதங்களில் வெளிநாட்டு நாணய கால/சேமிப்பு வைப்புக்கள்.
  • உள்வரும் பணம், வெளிநாட்டு நிதிப் பரிமாற்றங்கள், தாமதமின்றி உடனடி மொத்த கொடுப்பனவு (RTGS)(உள்வரும்/வெளிச்செல்லும்), மீள்கொள்வனவு ஒப்பந்தம்(REPO), இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறை(SLIPS) மற்றும் சம்பளக் கொடுப்பனவுகளை விரைவாகக் கையாளுதல்.
  • ஒரே கூரையின் கீழ் அனைத்து வாணிப சேவைகளும் கிடைக்கப்பெறல்.(உள் நாட்டு மற்றும் கடல் கடந்த வாடிக்கையாளர்கள்)
  • சர்வதேச வாணிப கடன் தொடர்பில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.
  • நெகிழ்வுப்போக்குடனான வாடிக்கையாளர் சேவை நேரம்.
  • ISO 9001:2008 தரச் சான்று அங்கீகாரத்துடன் அதி சிறந்த தரத்திலான சேவை.
ஏற்றுமதித் தீர்வுகள் தொடர்பான சலுகைகள்
  • விரைவான ஏற்றுமதிக் கடன் ஆலோசனை மற்றும் மிகவும் சிறந்த வீதங்களில் உறுதிப்படுத்தல்.
  • குறைந்த செலவில் நாணய கடித பரிமாற்றம்.
  • சிக்கலின்றிய ஆவண நடைமுறைப்படுத்தலுக்கு வாணிபப் பிரிவு பணியாளர்களின் ஆவண சரிபார்த்தல் ஆய்வு சேவைகள்.
  • ஏற்றுமதியின் கீழ் நாணய கடித ஆவணங்கள் தொடர்பான ஒப்பந்த ஆலோசனை.
  • ஏற்றுக்கொள்வதற்கு எதிரான ஆவணங்கள் மற்றும் கொடுப்பனவிற்கு எதிரான ஆவணங்கள் நிபந்தனைகளின் கீழ் ஏற்றுமதி ஆவணங்களின் கொள்வனவு.
  • தெரிவிற்கேற்ப முன்னோக்கிய பரிமாற்ற ஒப்பந்தங்கள், ஏற்றுமதிகளுக்கு எதிராக வரைவுகள் மற்றும் பணம் அனுப்பல் விநியோகம்.
  • ஏற்றுமதி உண்டியல்களின் கீழ் கொடுப்பனவுகளை சீராக கண்காணித்தல்.
  • கப்பலில் ஏற்றுவதற்கு முன்பதாகவும், ஏற்றிய பின்னரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் நெகிழ்வுப்போக்குடனான ஏற்றுமதிக் கடன்.
  • வாடிக்கையாளர்களின் சார்பில் ஏற்றுமதி ஆவணங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைத்தல்.
இறக்குமதித் தீர்வுகள் தொடர்பான சலுகைகள்
  • தனிநபர் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டணங்களுடன் ஒரு தினத்தினுள் நெகிழ்வுப்போக்குடனான மற்றும் பிரத்தியேகமான நாணய கடித விநியோகம்.
  • உலகளாவில் சர்வதேச வங்கி வலையமைப்பினூடாக உறுதிப்படுத்தல் ஏற்பாடு.
  • நாணய கடிதத்தின் கீழ் இறக்குமதி உண்டியல்களைக் கையாளுதல்.
  • இலகுவான, விரைவான மற்றும் திறன்மிக்க ஆவண சேகரிப்பு சேவைகள் (ஏற்றுக்கொள்வதற்கு எதிரான மற்றும் கொடுப்பனவிற்கு எதிரான ஆவண விதிகள்).
  • கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களின் ஆவணங்களின் வருகை தொடர்பில் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு.
  • நிபுணத்துவமும், அனுபவமும் மிக்க பணியாளர்களால் ஆவணங்கள் பரீட்சிக்கும் நடைமுறை.
  • வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி ஆவணங்கள் திறன்மிக்க வழிமுறையில் விநியோகிக்கப்படல் மற்றும் கப்பலில் வந்துள்ள பொருட் தொகுதிகளை இலகுவாக அகற்றுவதற்காக இணையத்தின் மூலமான சுங்க தகவல் பரிமாறல்.
  • திறன்மிக்க வழியில் வழங்குனர்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதல்.
  • கொடுப்பனவு மற்றும் அதைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான கண்காணிப்பு மற்றும் கண்டறியும் வசதி.
  • குறுகிய காலக் கடன்கள், நம்பிக்கைப் பற்றுச்சீட்டு கடன்கள் மற்றும் வைப்புக் கடன்கள் வடிவில் கொடுப்பனவு கடப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான கடன் வழங்கல்.
  • கப்பலில் ஏற்றும் பொருட்களுக்கான உத்தரவாத நடைமுறை மற்றும் வாடிக்கையாளர்கள் பொருட்தொகுதிகளை விரைவாக அகற்றிக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் விலைப்பட்டியலை முன்கூட்டியே உறுதி செய்தல்.
ஏனைய சேவைகள்
  • சிறந்த கட்டணங்களுடனும், விரைவாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் ஆலோசனை வழங்குதல்.
  • உத்தரவாதங்கள் சர்வதேச தர நடைமுறைகளுக்கும், சட்டரீதியான தேவைப்பாடுகளுக்கும் அமைவாக உள்ளதா என்பதை சரிபார்க்கும் பிரத்தியேகமான சேவையை வழங்குதல்.
  • கடன் வசதிகளை வழங்குதல்.
  • உத்தரவாத நடைமுறைகள் மற்றும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறை தொடர்பான தொழில்சார் ஆலோசனை.
  • விலைப்பட்டியல் தள்ளுபடி வசதிகள்.
  • பாதுகாப்பான வாணிப நிதி கொடுக்கல வாங்கல்களுக்காக கொள்வனவாளர்கள்/விற்பனையாளர்கள் தொடர்பான நிலவரங்களின் அறிக்கையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதி.
  • முற்பணக் கொடுப்பனவு, சேவைக் கொடுப்பனவுகள் மற்றும் திறந்த கணக்கு அடிப்படையில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் அனுப்பல் சேவை.
தொடர்பு கொள்ளும் தகவல் விபரம்
top