தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் (PFCA) திறப்பதற்கு தகவுடைய ஆட்கள்
- இலங்கை நாட்டினத்தவராகவுள்ள பராயமடையாதவர் உட்பட்ட தனியாளொருவர்.
- இலங்கைக்கு வெளியே வதிகின்ற பராயமடையாதவர் உட்பட இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட தனியாளொருவர்
- இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவரல்லாத வதிவுள்ளவரொருவர்
- ஒன்றில் இலங்கைக்குத் தற்காலிகமாக வருகைதருகின்ற அல்லது இலங்கைக்கு வருகைதருவதற்கு உட்கருதுகின்ற நாட்டினத்தவரல்லாதவரொருவர்
- அந்த அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரியிடம் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரியிடம் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைப்(PFCA) பேணிவந்த ஓர் இறந்துள்ள ஆளின் மரணச்சொத்தினது நிருவாகம் பூர்த்திசெய்யப்படும்வரை அத்தகைய இறந்துள்ள அந்த ஆளின் மரணச்சொத்தினது நிருவாகி அல்லது நிறைவேற்றுநர்.
- வங்கித்தொழில் முறைமையினூடாகக் கணக்கு வைத்திருப்பவரின் சார்பில் இலங்கைக்கு வெளியிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு செலாவணியிலான அனுப்புதொகைகள்
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறு பயண நோக்கத்துக்காக தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கைப்(PFCA) பற்று வைப்பதன்மூலம் கணக்கு வைத்திருப்பவரினால் பெறபப்ட்ட பயன்படுத்தப்படாத வெளிநாட்டு நாணயம்
- கணக்கு வைத்திருப்பவரினால் வெளிப்படுத்துகையின் மேல் இலங்கையினுட் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி (அதவது, அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெ டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதை விஞ்சுமிடத்து அல்லது அதற்குச் சமமாகவிருக்குமிடத்து சுங்கத்திணைக்களத்துக்கான வெளிப்படுத்துகை ஒன்றின்மீது அல்லது அத்தகைய வெளிநாட்டு நாணயத்தாள்கள் 15,000 ஐ.அமெநா டொலரை அல்லது வேறு வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதற்குக் குறைவாகவிருக்குமிடத்து, அதிகாரமளிக்கப்பட்ட வியாபரிகளின் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வியாபாரிகளின் வெளிப்படுத்துகை ஒன்றின்மீது)
- கணக்கு வைத்திருப்பவரைப் பொருட்படுத்தாது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PFCAs), வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCAs)) அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறில் பேணப்பட்ட கணக்குகள் என்பவற்றிலிருந்தான கைமாற்றல்கள்
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு வெளியே வதிவுள்ளவராகவிருக்குமிடத்து அல்லது இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாதவராகவிருக்குமிடத்து, அதே கணக்கு வதை;திருப்பவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கிலிருந்தான (IIA) கைமாற்றல்கள்.
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறு அதே கணக்கு வதை;திருப்பவரின் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் ரூபாக் கணக்கிலிருந்தான (CTRA)கைமாற்றல்கள்.
- வேறெவரேனுமாளின் தூதுவ வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்தான ( DFAs) கைமாற்றல்கள்
- மூலக் கைமாற்றல், தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கைப்(PFCA) பற்றுவைப்பதன்மூலம் செய்யப்பட்டிருப்பின் அல்லது இக்கட்டளை பயனுடையதாக வருமுன்னர் கணக்குவைத்திருப்பவரின் வதிவற்றவர் வெளிநாட்டு நாணயக் (RFC) கணக்கு, வதிவுள்ளவர் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கு, அல்லது வதிவுள்ள நாட்டினத்தவர் அல்லாதவரின் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கு என்பவற்றிலிருந்து செய்யப்பட்டிருப்பின் வெளிநாட்டு நாணயத்தில் இலங்கையில் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து எழுகின்ற, மூலதன ஈட்டுகைகள் மற்றும் வேறு பெறுகைகள்
- மூல முதலீடு இக்கட்டளை பயனுக்கு வருமுன்னர் கணக்குவைத்திருப்பவரின் வதிவற்றவர் வெளிநாட்டு நாணயக் (NRFC) கணக்கு, வதிவுள்ளவர் வெளிநாட்டு நாணயக் (RFC) கணக்கு, அல்லது வதிவுள்ள நாட்டினத்தவர் அல்லாதவரின் வெளிநாட்டு நாணயக் (RNNFC) கணக்கைப் பற்றுவைப்பதன்மூலம் செய்யப்பட்டிருப்பின் வெளித்தரும்பல் முதலீட்டுக் (OIA) கணக்கொன்றினுள் வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட மூலதனமும் மூலதன ஈட்டுகைகளும்
- வெளிநாட்டுப் பயண அட்டை தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து (PFCA) நிரப்பப்பட்டிருந்த தொகைவரை, அதே கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டுப் பயண அட்டையில் எஞ்சியுள்ள பயன்படுத்தப்படாத மீதி
- கணக்குவைத்திருப்பவர் இலங்கையில் வதிகின்ற நாட்டினத்;தவர் அல்லாத ஊழியரொருவராகவிருக்குமிடத்து, மாதாந்தச் சம்பளமாக, தொழில் நன்மைகளாக மற்றும் வேறு தொடர்புபட்ட நன்மைகளாகத் தொழில்தருநர்களின் இலங்கை ரூபாக் கணக்கிலிருந்தான கைமாற்றல்கள்.
- கணக்குவைத்திருப்பவர் இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாத ஊழியரொருவராகவிருக்குமிடத்து, வரவுவைக்கும் நாளன்று பெறப்பட்ட செலாவணி வீதத்தில் மாற்றப்பட்ட, வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதற்காக மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட இலங்கை ரூபாக்களினாலான தொகைகள்
- காலத்துக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய வேறு ஏதேனும் வகுதியினவான கணக்குகளிலிருந்தான கொடுக்கல்வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தயை கொடுக்கல்வாங்கல்களிலுருந்தான கைமாற்றல்கள்.
- சட்டத்தின் 8 (3)ஆம் பிரிவின் நியதிகளின்படி கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து இலங்கைக்கு வெளியேயிருந்து அனுப்பப்படும் அனுப்புதொகைகள்
- கணக்கில் வைத்திருக்கப்பட்ட நிதிகளின்மீது வெளிநாட்டு நாணயத்தில் உழைக்கப்பட்ட வட்டி
- இலங்கைக்கு வெளியே செய்யப்பட்ட எவையேனும் வெளித்திரும்பல் அனுப்புதொகைகள்
- இலங்கை ரூபாக்களில் இலங்கையிலான செலுத்தீடுகள்
- கணக்கு வைத்திருப்பவரைப் பொருட்படுத்தாது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PFCAs), அல்லது கரைகடந்த வங்கித்தொழிற் கூறில் பேணப்பட்ட கணக்குகள் என்பவற்றிலிருந்தான கைமாற்றல்கள்
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு வெளியே வதிவுள்ளவராகவிருக்குமிடத்து அல்லது இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாதவராகவிருக்குமிடத்து, அதே கணக்கு வைத்திருப்பவரின் உட்திரும்பல் முதலீட்டுக் கணக்கிலிருந்தான (IIA) கைமாற்றல்கள்.
- ஒரு வெளிநாட்டுப் பயண அட்டையை உள்நிரப்புவதற்காக நிதிகளைக் கைமாற்றுதல்.
- தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிலுள்ள (PFCA) நிதிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டுச் செலாவணியில் இலங்கையில் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஏதேனும் முதலீடு தொடர்பிலான கைமாற்றல்கள்
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டவாறாகப் பயண நோக்கத்துக்காக 10,000 ஐ.அநா டொலர்வரை (அல்லது வேறேதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதுவரை) வெளிநாட்டு நாணயத்தாள்களினாலான மீளப்பெறுதலஂ.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கைக்கு வெளியே வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாதவராகவிருந்து இலங்கைக்குத் தற்காலிகமாக வருகைதருகின்றவிடத்து, வெளிநாட்டு நாணயத்திலான மீளப்பெறுகைகள்.
- கணக்கு வைத்திருப்பவர் இலங்கையில் வதிகின்ற நாட்டினத்தவர் அல்லாத ஊழியரொருவராக இருக்குமிடத்து, அத்தகைய தொழில்தருநருக்கு வருமதியான சம்பளங்கள் மற்றும் வேறேதேனும் கொடுப்பனவில் மிகைக்கொடுப்பனவு தொடர்பில் தொழில்தருநரின் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கான கைமாற்றல்கள்.
- இவ்வட்டவணையின் 1ஆம் பந்தியின் (2) (ஓ) என்னும் உட்பந்தியின்படி, இலங்கையில் வதிபவராகவுள்ள நாட்டினத்தவர் அல்லாத ஊழியரொருவருக்கு மிகைக்கொடுப்பனவொன்று செய்யப்படும் பட்சத்தில் தொழில்தருநர்களின் இலங்கை ரூபாக் கணக்குக்கான கைமாற்றல்கள்.
- மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின்மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு கொடுக்கல் வாங்கல்கள் அல்லது வகுதியினவான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தில் வதிவோருக்கான கொடுப்பனவுகள்.
- காலத்துக்குக்காலம் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படுவதற்கு அனுமதியளிக்கக்கூடிய வேறேதேனும் வகுதியினவான கணக்குகளிருந்தான, கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட பணிப்புகளின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு, அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் அல்லது கைமாற்றல்கள்.
- கணக்கு வைத்திருப்பவரின் வெளிநாட்டு நாணயக் கடன் கணக்கில் (FCLA) அல்லது இலங்கை ரூபா தனிசு கணக்குக்கு (LLA) நிதியங்களைக் கைமாற்றல்.
பொது விடயங்கள்
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளை (PFCAs), எந்தவொரு பெயர்க் குறிப்பிட்டப்பட்ட நாணய வகையிலானதாக அதாவது, USD, GBP, EUR, AUD, CAD, HKD, SGD, JPY, SEK, NZD, DKK, NOK,CNY மற்றும் CHY ஆகிய வெளிநாட்டு நாணயத்தில் சேமிப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள் (காசோலை வரைகின்ற வசதியின்றி) அல்லது கால வைப்புக் கணக்குகளாக திறக்கப்படலாம் மற்றும் பேணப்படலாம்.
பெற்றுக்கொள்ள வேண்டிய பத்திரங்களும் தகவல்களும்
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றைத் (PFCA) திறப்பதற்கு முன்னர் ஏற்புடையதான வகையில் பின்வரும் தகவல்களையும் பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
|
தகவு பெறும் ஆட்கள் |
தகவல்கள்/பத்திரங்கள் |
|
|
|
i |
பராயமடையாதவர் உட்பட, இலங்கையரான எவரேனும் ஆளொருவர் |
- முழுப் பெயர், நாட்டினம், முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
- தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் (புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) பிரதி.
- பராயமடையாதவரெனின், பிறப்புச் சான்றிதழின் பிரதி.
- கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
- FATCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
- வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்
|
ii |
பராயமடையாதவர் உட்பட, இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆளொருவர். |
- முழுப் பெயர், நாட்டினம், வெளிநாட்டு முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்
தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் (புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) பிரதி.
- பராயமடையாதவரெனின், பிறப்புச் சான்றிதழின் பிரதி.
- இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்ற திகதி.
- வெளிநாட்டு அரசொன்றினால் வழங்கப்பட்டுள்ள பிரசாவுரிமை/விசா தன்மை
- கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
- FATCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
- வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்
|
iii |
இலங்கையில் வதிகின்ற நாட்டினரல்லாத ஆ ளொருவர். |
- முழுப் பெயர், நாட்டினம், வெளிநாட்டு முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
- இலங்கையில் தொழில்புரியும் இடத்தின் முவரியும் பதவியும் (இருப்பின்)
- தொழில் ஒப்பந்தத்தின் பிரதியும் சம்பள விபரங்களும்.
- கடவுச்சீட்டின்(புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசா குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களின் பிரதிகள்.
- கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
- FTCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
- வங்கியினால் காலத்துக்குக்காலம் குறித்துரைக்கப்படுகின்ற வேறு பத்திரங்கள்
|
iv |
தற்காலிக பயணத்தின்மீது இலங்கைக்கு வருகைதந்துள்ள அல்லது இலங்கையில் பயணம்செய்வதற்குக் கருதுகின்ற நாட்டினத்தவரல்லாத ஆளொருவர் |
- முழுப் பெயர், நாட்டினம், முகவரி மற்றும் தொடர்புபடக்கூடிய தகவல்கள்.
- கடவுச்சீட்டின்(புகைப்படம் மற்றும் விபரங்களுடனான பக்கம்) மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விசா குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களின் பிரதிகள்.
- கணக்கு திறக்கும் விண்ணப்ப படிவம்.
- FTCA வெளிப்படுத்துகை (வெளிநாட்டு கணக்குகளுக்காக வரி அறவிடுவதை இணங்கியொழுகும் சட்டம்)
|
மேலதிக விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மக்கள் வங்கிக் கிளைக்கு செல்லுங்கள் அல்லது எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்