தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

அரசாங்க பிணையங்கள்

கட்டணங்கள் மற்றும் ஏனைய தகவல் விபரங்களை அறிந்து கொள்ள திறைசேரியில் அல்லது எந்தவொரு கிளையிலும் பின்வரும் எவரையும் தயவு செய்து தொடர்பு கொள்ளவும், suranjit@peoplesbank.lk, thilinak@peoplesbank.lk, anushkiw@peoplesbank.lk

அரசாங்க பிணையங்கள்

இது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற பிணையங்களாகும். விநியோகிப்பவர் இறைமை கொண்ட அரசாங்கமாக உள்ளமையால் இது உண்மையில் ஆபத்து இல்லாத கடன் முதலீடுகளாகும். ஆகையால் நிச்சயமாக முதலீட்டாளர்களுக்கு ஒரு ஆறுதலாகும்.

அரசாங்க பிணையங்களின் விசேட அம்சங்கள் சில வருமாறு
  • மீள்கொடுப்பனவிற்கு அரசாங்கத்தின் உத்தரவாதம்
  • முதலீடு செய்யும் பணம் 100% பாதுகாப்பானது
  • கவர்ச்சியான இலாபங்கள்
  • பெரும் பணப்புழக்கம் - எந்நேரமும் வாங்கலாம் மற்றும் விற்கலாம்
  • உரிமையாண்மையை இலகுவாக கைமாற்றம் செய்யலாம்
  • சந்தையில் மிகவும் உயர்ந்த அங்கீகாரத்தைக் கொண்டுள்ள பாதுகாப்பு
  • வேறொன்றுக்கு எதிராக உபயோகிக்க முடியும்
  • நிறுத்தி வைக்கப்பட்ட வரி மற்றும் முத்திரைத் தீர்வை அற்றது
அரசாங்க பிணையங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
  1. திறைசேரி உண்டியல்கள்
  2. திறைசேரி முறிகள்
தகுதியுள்ள முதலீட்டாளர்கள்:
  1. இலங்கைப் பிரஜைகள்
  2. வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
    1. நாட்டு நிதியங்கள், பிராந்திய நிதியங்கள் அல்லது பரஸ்பர நிதியங்கள் அடங்கலாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்.
    2. இலங்கைக்கு வெளியில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்கள்
    3. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்
    4. இலங்கையில் வதியாத இலங்கைப் பிரஜைகள்

தகுதியுள்ள முதலீட்டாளரின் பெயரில் வங்கியில் ஆரம்பிக்கப்படுகின்ற அல்லது ஏற்கனவே பேணப்படுகின்ற ரூபா “பிணையங்கள் முதலீட்டுக் கணக்கின்” மூலமாக திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளுக்கான கொள்வனவுக்கு வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குள் கொண்டு வர முடியும், திறைசேரி உண்டியல்கள்/திறைசேரி முறிகளின் விற்பனை/முதிர்வின் போது ஈட்டும் பணத்தை மாற்றம் செய்ய முடியும் மற்றும் மூலதன ஆதாயத்தின் மூலமாக ஈட்டப்படுகின்ற எவ்விதமான வருமானத்தையும் மாற்றம் செய்ய முடியும்.

திறைசேரி உண்டியல்கள்

அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்படுகின்ற ஒரு குறுகிய கால அரசாங்க பிணையமாகும்.

  • தள்ளுபடி கொண்ட முகப்பெறுமானத்துடன் திறைசேரி உண்டியல்களை வங்கி விநியோகிக்கின்றது. முதலீட்டுச் செலவு மற்றும் முதிர்வுப் பெறுமானம் (முகப் பெறுமானம்) ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு முதலீட்டாளருக்கு கிடைக்கின்ற வட்டி வருமானம் ஆகும்.
  • வேறு எந்தவொரு அரசாங்க பிணையத்தைப் போலவே திறைசேரி உண்டியல்களை விநியோகிப்பது இறைமை கொண்ட அரசாங்கம் ஆகையால் கடன் ஆபத்து அற்றது. இவை 3, 6 அல்லது 12 மாத கால அளவுகளில் கிடைக்கின்றது.
திறைசேரி உண்டியல்களின் விசேட அம்சங்கள் சில வருமாறு
  • கடன் ஆபத்து அற்றது
  • வட்டி மீது நிறுத்தி வைக்கப்படும் வரி கிடையாது
  • பற்று வரி கிடையாது
  • குறுகிய கால முதலீடுகள்
  • கடன்களுக்கு எதிரான உத்தரவாதமாக உபயோகிக்கலாம்
  • தேவைப்படும் பட்சத்தில் பகுதியளவில் மீளப்பெறலாம்
திறைசேரி முறிகள்

அரசாங்கத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியால் விநியோகிக்கப்படுகின்ற இடைக் காலம் முதல் நீண்ட கால அரசாங்க பிணையங்களே திறைசேரி முறிகளாகும். வேறு எந்தவொரு அரசாங்க பிணையத்தையும் போலவே, இறைமை கொண்ட அரசாங்கத்தால் விநியோகிக்கப்படுவதால் திறைசேரி முறிகள் ஆபத்தற்ற கடன் முதலீடுகளாகும்.

திறைசேரி முறிகள் 2 முதல் 23 ஆண்டுகள் வரையான காலத்திற்குக் கிடைக்கப்பெறுகின்றன (தற்சமயம் இலங்கை மத்திய வங்கியால் விநியோகிக்கப்பட்டுள்ள திறைசேரி முறிகளின் அதிகூடிய முதிர்வுத் திகதி 01/03/2045 ஆகும்).

திறைசேரி முறிகள் இரு வகையான வட்டி வீதங்களைக் கொண்டுள்ளன

  • பற்றுரிமைச் சீட்டு வீதம்: அரையாண்டுக்கு ஒரு முறை (ஆறு மாதங்களுக்கு ஒரு முறை) பற்றுரிமைச் சீட்டுகளுக்கான கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்ற வீதம்.
  • முதிர்வின் போது ஈட்டுதல்: முறி மீது முதலீட்டை மேற்கொண்டு முதிர்வுத் திகதி வரை பேணுவதால் சம்பாதிக்கின்ற ஒட்டுமொத்த விளைவு வருமானம்.
திறைசேரி முறிகளின் சிறப்பம்சங்கள் சில வருமாறு
  • கடன் ஆபத்து அற்றது
  • வட்டி மீது நிறுத்தி வைக்கப்படும் வரி கிடையாது
  • பற்று வரி கிடையாது
  • அரையாண்டு பற்றுரிமைச் சீட்டுகள் முதலீட்டுக் காலத்தில் சீரான வட்டிக் கொடுப்பனவுகளை வழங்குகின்றன
  • கடன்களுக்கு எதிரான உத்தரவாதமாக உபயோகிக்க முடியும்
  • தேவைப்படும் பட்சத்தில் பகுதியளவில் மீளப்பெற முடியும்
top