தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

மறுநிதியளிப்பு கடன்கள்
கப்ருக ஆயோஜன கடன் திட்டம் (தெங்கு பயிர்ச்செய்கை சபையுடன் இணைந்து அமுலாக்கம் செய்யப்பட்டது)

தெங்குத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு மூலதனத்தை வழங்குவதற்காக மக்கள் வங்கியுடன் இணைந்து தெங்கு பயிர்ச்செய்கை சபை முன்னெடுக்கின்ற சலுகை அடிப்படையிலான கடன் உதவி சேவையே கப்ருக ஆயோஜன கடன் திட்டமாகும். இக்கடன் திட்டத்தின் மூலமாக 10 அபிவிருத்திப் பிரிவுகளின் கீழ் சலுகை நிபந்தனைகளுடன் தெங்குத் தோட்டக்காரர்களுக்கு கடன் உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. உயர்ந்த மட்டத்திலான உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை ஈட்டுவதற்காக சாகுபடியாளர்களை வழி நடத்தி தென்னம் தோட்டங்களை ஒட்டுமொத்த பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அணுசரனையளிப்பதே இந்த கடன் சேவையின் பிரதான நோக்கமாகும்.

  • தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்களும்
  • வட்டி வீதம்
    9% வருடாந்த வட்டி
  • அதிகபட்ச தொகை
    ரூபா 3.0 மில்லியன்
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    05 ஆண்டுகள், அதிகபட்ச சலுகைக்காலமாக 12 மாதங்கள் அடங்கலாக
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இரண்டு தனிப்பட்ட உத்தரவாதமளிப்பவர்கள் மற்றும் அசையும் அல்லது அசையாச் சொத்து மூலமான அடமானம்.
  • கடன் வழங்கப்படும் துறைகள்
  • புதிய தென்னம் தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
  • மீளவும் தென்னை நாட்டுதல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
  • தெங்குச் செய்கை நிலங்களை புனரமைத்தல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கையை புனரமைத்தல்
  • தெங்கு பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய சிறப்பு திட்டங்கள்
  • தனியான தென்னை வளர்ப்பு
  • சொட்டு முறை நீர்ப்பாசன முறைமையை அமைத்தல்
  • நெகிழ்வுப்போக்குடைய குழாய்-வழி நீர்ப்பாய்ச்சல் செயற்திட்டங்களை நிறுவுதல் (குழாய் நீர்ப்பாசன அமைப்பு)
  • தெங்கு இடைப்பயிர்ச்செய்கைக்கான தோட்ட இயந்திரங்கள்
  • நாற்று மையங்கள்
  • சோடை பாய்ந்த தென்னம்தோட்டத்தில் கால்நடை, செம்மறி, ஆடு வளர்ப்பு
சௌபாக்யா கடன் திட்டம்

விவசாயம், கால்நடை, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு விசேட கடன் திட்டமே சௌபாக்யா கடன் திட்டம்.

  • தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
    அனைத்துப் பிராந்தியங்கள்
  • வட்டி வீதம்
    8%
  • அதிகபட்ச கடன் தொகை
    ரூபா 25,000,000
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    6 மாத சலுகைக் காலம் உட்பட அதிகபட்சமாக 5 வருடங்கள்
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தரவாதம்
  • கடன் வழங்கப்படும் செயற்பாடுகள்
  • விவசாயத் துறை, கைத்தொழில் சார்ந்த புதிய செயற்திட்டங்கள், சேவைகள், சிறு அளவிலான சுற்றுலாத்துறை போன்ற வருமானம் ஈட்டும் செயற்பாடுகளை ஆரம்பித்தல், நிர்மாணத் துறைக்கு இயந்திரங்களை கொள்வனவு செய்தல்.
  • மேற்குறிப்பிட்டப்பட்ட துறைகளுடன் தொடர்புடைய புதிய மற்றும் புத்தாக்கமான செயற்திட்டங்கள் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட செயற்திட்டங்கள்.
  • வாகனங்கள் மற்றும் காணியைக் கொள்வனவு செய்தல், கட்டடங்கள், அரிசி ஆலைகள், கராஜ் ஆகியவற்றை நிர்மாணித்தல் போன்ற தேவைகளுக்கும் தொழிற்படு மூலதனத் தேவைகளுக்கும் கடன்கள் வழங்கப்படமாட்டாது.
மறு கடன் அல்லாத கடன் திட்டங்கள்
புதிய பீப்பிள்ஸ் ஃபாஸ்ட் கடன் திட்டம்

எந்தவொரு தொழில் முயற்சியிலும் அவற்றை முன்னெடுப்பதுடன் தொடர்புபட்ட அனைத்துச் செலவுகளையும் சமாளிப்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். ஆகவே தொழில் முனைவோர் சிரமங்களின்றி தமது தொழில்களை முன்னெடுக்க உதவுவதற்கு குறைந்த வட்டியுடனான சுய தொழில் கடன்கள் அவசியமாகும். தொழில் முனைவோர் தமது செயற்திட்டங்களை வினைதிறன் மிக்க வழியில் முன்னெடுத்து இலாபங்களை ஈட்டிக்கொள்வதற்கு உதவும் நோக்குடன் புதிய பீப்பிள்ஸ் ஃபாஸ்ட் கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
    அனைத்து மாவட்டங்கள்
  • கடன் வழங்கப்படும் துறைகள்
    விவசாயம், விவசாய கைத்தொழில் துறைகள், சுய-தொழில்கள், கால்நடை வளர்ப்பு, சேவைகளை வழங்கும் சிறு அளவிலான தொழிற்துறைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் போன்று வருமானத்தை ஈட்டித்தரும் எந்தவொரு நடவடிக்கைகள்.
  • பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தகைமை
    குறைந்தபட்சம் 12 மாதங்களாக நுண், சிறிய அல்லது நடுத்தர அளவிலான தொழில் முயற்சியை முன்னெடுத்து வருகின்ற, வர்த்தகரீதியாக சாத்தியம் கொண்ட தொழில்முயற்சியாளராக கடன் பெறுனர் இருத்தல் வேண்டும்.
  • வட்டி வீதங்கள்
    நெகிழ்வுப்போக்குடனான மற்றும் போட்டித்திறனுடனான வட்டி வீதங்கள்.
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்சம் 3-5 வருடங்கள்
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தரவாதம்
  • அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
  • நுண் - ரூபா 250,000/- வரை (குறைந்தபட்ச கடன் தொகை ரூபா 25,000/-)
  • சிறிய - ரூபா 2,000,000/- வரை
  • நடுத்தர - ரூபா 20,000,000/- வரை
  • கடன்பெறுனரின் மூலதனப் பங்களிப்பு
    • 100,000/- வரையான கடனுக்கு 10%
    • 100,000/- இற்கு மேற்பட்ட கடனுக்கு 25%
  • மொத்த மூலதனத்தில் 50% மூலதனப் பங்கை வழங்கக்கூடிய தொழில் முயற்சியாளர்களும் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • விண்ணப்பதாரிகள் 18-65 வயதிற்குட்டபவர்களாக இருப்பதுடன், வங்கிக் கிளை இயங்கும் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவோ அல்லது வங்கியின் தொழிற்பாட்டுப் பிரதேசத்தில் தொழில் முயற்சியை முன்னெடுப்பவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் வேறு எந்தவொரு நிதி நிறுவனத்திலும் கடனைப் பெற்றுவிட்டு அதனை மீளச் செலுத்த தவறியவர்களாக இருத்தல் ஆகாது.
நெல் கொள்வனவுக்கான கடன்

நெல் கொள்வனவுக்கான கடன் திட்டமானது அரிசி ஆலைக்காரர்கள் மற்றும் நெல்லைக் கொள்வனவு செய்பவர்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமாகும். ஆலைகளை இன்னும் அதிகமான அளவில் திறன் மிக்க வகையில் இயக்குவதற்கு தொடர்ச்சியாக நெல்லை வழங்கும் வகையில் அதனைப் பேணி, வலுப்படுத்துவதற்கு இது பெறுமதிமிக்க ஒரு ஆதாரமாகும்.

  • தொழிற்பாட்டு மாவட்டங்கள்
    அனைத்து மாவட்டங்கள் 
  • கடன் வழங்கப்படும் துறைகள்
    நெல் மற்றும் ஏனைய தானியங்களைக் கொள்வனவு செய்பவர்கள் மற்றும் அரிசி ஆலைக்காரர்கள். 
  • வட்டி வீதங்கள்
    நெகிழ்வுப்போக்குடனான மற்றும் போட்டித்திறன் கொண்ட வட்டி வீதங்கள். 
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    அதிகபட்சம் 180 தினங்கள்
  • அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
  • உச்ச வரம்பு கிடையாது.
  • நெல் அல்லது தானிய கையிருப்பு பெறுமதியில் 75% இற்கும் மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
  • உத்தரவாதம்
  • நெல் அல்லது தானிய கையிருப்பின் உத்தரவாதத்துடன், வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதிய வருமானம், சொத்துக்கள் மற்றும் நிதியியல் இருப்பைக் கொண்ட தனிப்பட்ட உத்தரவாதமளிப்பவர்கள் இருவர்.

    Or

  • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏனைய உத்தரவாதங்கள்.
ரண் அஸ்வென்ன கடன் திட்டம்

விவசாய நடவடிக்கைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்தல் மற்றும் வர்த்தகமயமாக்கலுக்கான ஒரு விசேட திட்டமாக ரண் அஸ்வென்ன கடன் திட்டம் அமைந்துள்ளது. விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்வதை மேம்படுத்துவதற்கான மூலதனத்தை வழங்குகின்றது.

  • தொழிற்பாட்டு மாவட்டங்கள்
    அனைத்து மாவட்டங்கள்
  • பெற்றுக்கொள்ளும் தகைமை
    அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பதிவின் கீழ் வியாபாரத்தை முன்னெடுக்கின்ற வர்த்தகரீதியாக சாத்தியமான தொழில் முயற்சியாளராக கடன் பெறுனர் இருத்தல் வேண்டும்.
  • மூலதனப் பங்கில் கடன்பெறுனரின் பங்களிப்பு
    உத்தேச செயற்திட்டத் தொகையில் 25%.
  • வட்டி வீதம்
    6.54%
  • மீள்கொடுப்பனவுக் காலம்
    • அதிகபட்சமாக 5 ஆண்டுகள்
    • தொழிற்படு மூலதனத்திற்கு - அதிகபட்சமாக 2 ஆண்டுகள்
  • உத்தரவாதம்
    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற உத்தரவாதம்
  • அதிகபட்ச/குறைந்தபட்ச கடன் தொகை
  • சிறு அளவிலான விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புக்கள் - அதிகபட்சமாக ரூபா 5 மில்லியன்.
  • விவசாய செயலாக்கம் - அதிகபட்சமாக ரூபா 300 மில்லியன்.
  • வர்த்தக அளவிலான விவசாயம் - அதிகபட்சமாக ரூபா 750 மில்லியன்.
  • கடன் வழங்கப்படும் துறைகள்
  • நெல், பழ வகை மற்றும் மரக்கறி வகை, பருப்பு வகை, மலர்ச்செடி வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் தொடர்பான புதிய நுட்பங்களை பயன்படுத்துதல்.
  • நவீன செயற்கை முறையில் கோழிப் பண்ணை மற்றும் நன்னீர் மீன் பண்ணை வளர்ப்பில் ஈடுபடுதல்.
  • மலர்ச்செடி நாற்று வளர்ப்பு.
  • அலங்கார மீன் தொடர்பான செயற்பாடுகள்.
  • உயர் தொழில்நுட்ப நீர்ப்பாசன முறைகள்.
  • விவசாய செயலாக்க நடவடிக்கைகள்.
  • பாரிய அளவு பதனக்கிடங்கு சேமிப்பகம் மீதான முதலீடு.
  • அரிசி ஆலைகளின் நிர்மாணம்.
  • இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்தல்
top