தெங்குத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு மூலதனத்தை வழங்குவதற்காக மக்கள் வங்கியுடன் இணைந்து தெங்கு பயிர்ச்செய்கை சபை முன்னெடுக்கின்ற சலுகை அடிப்படையிலான கடன் உதவி சேவையே கப்ருக ஆயோஜன கடன் திட்டமாகும். இக்கடன் திட்டத்தின் மூலமாக 10 அபிவிருத்திப் பிரிவுகளின் கீழ் சலுகை நிபந்தனைகளுடன் தெங்குத் தோட்டக்காரர்களுக்கு கடன் உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. உயர்ந்த மட்டத்திலான உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை ஈட்டுவதற்காக சாகுபடியாளர்களை வழி நடத்தி தென்னம் தோட்டங்களை ஒட்டுமொத்த பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு அணுசரனையளிப்பதே இந்த கடன் சேவையின் பிரதான நோக்கமாகும்.
- தொழிற்பாட்டுப் பிராந்தியங்கள்
அனைத்துப் பிராந்தியங்களும் - வட்டி வீதம்
9% வருடாந்த வட்டி - அதிகபட்ச தொகை
ரூபா 3.0 மில்லியன் - மீள்கொடுப்பனவுக் காலம்
05 ஆண்டுகள், அதிகபட்ச சலுகைக்காலமாக 12 மாதங்கள் அடங்கலாக - உத்தரவாதம்
வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற இரண்டு தனிப்பட்ட உத்தரவாதமளிப்பவர்கள் மற்றும் அசையும் அல்லது அசையாச் சொத்து மூலமான அடமானம்.
- கடன் வழங்கப்படும் துறைகள்
- புதிய தென்னம் தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
- மீளவும் தென்னை நாட்டுதல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
- தெங்குச் செய்கை நிலங்களை புனரமைத்தல் மற்றும் இடைப்பயிர்ச்செய்கை
- தெங்கு பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய சிறப்பு திட்டங்கள்
- தனியான தென்னை வளர்ப்பு
- சொட்டு முறை நீர்ப்பாசன முறைமையை அமைத்தல்
- நெகிழ்வுப்போக்குடைய குழாய்-வழி நீர்ப்பாய்ச்சல் செயற்திட்டங்களை நிறுவுதல் (குழாய் நீர்ப்பாசன அமைப்பு)
- தெங்கு இடைப்பயிர்ச்செய்கைக்கான தோட்ட இயந்திரங்கள்
- நாற்று மையங்கள்
- தென்னம்தோட்டத்தில் கால்நடை, செம்மறி, ஆடு வளர்ப்பு