தற்போதைய விகிதங்கள்

நிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்
கடன் விகிதம் - வீட்டுவசதி
கடன் விகிதம் - தனிநபர் கடன்கள்
தங்கக்கடன் வட்டிவீதம்

* நிபந்தனைகள் பொருந்தும்

நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தினை இலங்கையில் உள்ள அன்பிற்குரியவர்களுக்கு கடல் கடந்து அனுப்பி வைக்கும் சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது மக்கள் வங்கி.

உங்கள் பணப்பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்கள் வங்கி பின்வரும் வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகிறது.

Methods of Payment Instructions
People’s Instant Remit

சேவை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் மக்கள் வங்கி கணக்குகளுக்கு நேரடி இணையத்தின் மூலமான வரவு

People’s e-remittance

அதிகூடிய உலக நாடுகளிலுள்ள மக்கள் வங்கி முகவர்கள் ஊடாக வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் சேவை

SWIFT

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் சேவை

Cash Pickup –B2B

உலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு மக்கள் வங்கியின் கிளையின் கருமபீடத்திலும் நேரடியாக பெற்றுக்கொள்ள பணம் அனுப்பும் முறை.

செல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பணம் அனுப்புகின்ற வங்கியின் நாணயமாற்று நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கலுக்குரிய இரகசிய அடையாள இலக்கத்தின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

People’s e-remittance , SWIFT

பணத்தினை பெற்றுக்கொள்ளும் நபரின் அடையாள அட்டை இலக்கம், முழுப்பெயர், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றின் மூலம் பணம் அனுப்பும் சேவைகள்

Western Union

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் சேவை

உங்களுக்கு பொருத்தமான வழிமுறை ஒன்றினை நீங்கள் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு சேவை செய்ய மக்கள் வங்கிக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்குகின்றீர்கள்.

மக்கள் வங்கியின் இலத்திரனியல் முறை பணம் அனுப்பல் சேவை

People's Remittance அதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து ஒரு சில நிமிடங்களுக்குள் இலங்கைக்கு பணத்தை அனுப்பிவைப்பதற்கு உதவும் வகையில் இணையத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வங்கியின் ஒரு உற்பத்தியே ‘People’s e-Remittance’ சேவை. விரைவான மற்றும் சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைமைகளை தன்னியக்கமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.

மக்கள் வங்கியின் முகவர்களினூடாக வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு People’s e Remittance இடமளிக்கின்றது. தற்சமயம் பின்வரும் மக்கள் வங்கி முகவர்களினூடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது.

People's e-Remittance சேவை முகவர்களின் பட்டியல்

பாதுகாப்பான ஒரு இணையத்தளத்தின் மூலமாக செலவு குறைந்த, சிரமங்களின்றிய தரவு மாற்றத்துடன் கூடிய ஒரு வழியாக இணையத்தின் பாவனையை People’s e-Remittance ஊக்குவிக்கின்றது. பாவனைக்கு இலகுவான முன்முக முறைமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியன அனுப்புகின்ற பணத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறைப்படுத்தும் நேரத்தைக் குறைப்பதுடன், திறனை கணிசமான அளவில் அதிகரிக்கச் செய்கின்றது.

  • அவுஸ்திரேலியா
    Kapruka (Pvt) Ltd.
  • பாஹ்ரேன்
    Zenj Exchange
  • இஸ்ரேல்
    • Tifco Logistics & Trade Ltd.
    • Unigiros Ltd.
  • சவுதி அரேபியா
    • Alamoudi Exchange
    • National Commercial Bank (NCB)
  • குவைத்
    • Al Mulla International Exchange Co. W.L.L.
    • Al Muzaini Exchange Company
    • Bahrain Exchange Company W L L
    • City International Exchange W.L.L.
    • Dollarco Exchange Co. Ltd.
    • International Financial Line (FILCO)
    • Joy Alukkas Exchange
    • Kuwait Bahrain Internatioal Ex. Co. KSC
    • National Money Exchange Co
    • UAE Exchange Centre W.L.L.
  • கட்டார்
    • Al Dar For Exchange Works
    • Al Fardan Exchange Co. L.L.C.
    • Al Sadd Exchange
    • Alzaman Exchange Company.
    • City Exchange Company
    • Gulf Exchange Company
    • Habib Qatar International Exchange Ltd.
    • Islamic Exchange Company W.L.L
  • ஐக்கிய அரபு இராச்சியம்
    • Al Ahalia Exchange Company
    • Al Ansari Exchange
    • Al Rostamani Exchange Co. LTD
    • Joy Alukkas Exchange
    • UAE Exchange Centre L.L.C.
    • Wall Street Exchange Centre W.L.L.
  • ஓமான்
    • Asia Express Exchange
    • Oman & UAE Exchange Centre
பணம் அனுப்பும் வழிமுறை
  • நீங்கள் பணத்தை அனுப்பும் வங்கி/நாணய மாற்று நிறுவனத்திற்குச் செல்லவும் (People’s eRemittance முகவர்)
  • மக்கள் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு பணத்தை அனுப்பும் வங்கி/நாணய மாற்று நிறுவனத்திற்கு அறிவுறுத்தலை வழங்கவும்.
  • பயனாளியின் விபரங்களைப் பூர்த்தி செய்யவும்.
    • பயனாளியின் முழுப் பெயர் அல்லது முதலெழுத்துக்களுடன் பெயர்
    • முழுமையான கணக்கு இலக்கம் (உ-ம். மக்கள் வங்கி - 15 இலக்க கணக்கு இலக்கம்)
    • வங்கி மற்றும் கிளையின் பெயர் (ஏனைய வங்கிக் கணக்குகளுக்கும் பணத்தை அனுப்பி வைக்க முடியும்)
    • பயனாளியின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு கொள்ளும் இலக்கம் (இருக்கும் பட்சத்தில்).
    • பயனாளி கணக்கொன்றைக் கொண்டிருக்காவிட்டாலும் பணத்தை அனுப்பி வைக்க முடியும், அடையாள அட்டை இலக்கம், முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்கவும்.

 

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:

அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் தொடர்பான விசாரணைகளுக்கு

தயவு செய்து தொடர்பு கொள்ளவும் :முகாமையாளர் - வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் மற்றும் விசாரணைகள் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்)
தொலைபேசி இலக்கம் : +94 112438395 , +94 112437985
மின்னஞ்சல் : teletran@peoplesbank.lk

மக்கள் வங்கி உடனடி பணம் அனுப்பல் சேவை

People's Instant Remit
நொடிப்பொழுதில் உடனடியாக இணையத்தளத்தின் மூலமாக பணத்தை அனுப்பும் சேவையை வழங்குவதற்காக ‘People's Instant Remit’ சேவையை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்கள் வங்கி உடனடி பணம் அனுப்பல் சேவையின் சிறப்பம்சங்கள்
  • மக்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி/இணையத்தின் மூலமான வரவு
  • நாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் கருமபீடத்தில் நேரடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பணத்தை அனுப்பி வைக்க முடியும்.
  • பணத்தை அனுப்புபவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் எஸ்எம்எஸ் மூலமான தகவல் பகிர்வு
  • முகவருக்கு இணைய முகப்புத்தகத்தினூடாக தகவல் பகிர்வு

தற்சமயம் மக்கள் வங்கியின் பின்வரும் Vostro முகவர்கள் ஊடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது.

உலகளாவில்
  • TransFast Remittance LLC
  • UAE Exchange Centre
  • XPress Money
கட்டார்
  • Al Mana Exchnage
ஐக்கிய அரபு இராச்சியம்
  • Index Exchange LLC
  • United Bank Limited (UBL)
குவைத்
  • Bahrain Exchange Company
SWIFT முறை பணம் அனுப்பல் சேவை

SWIFT
நீங்கள் SWIFT ஊடாக மிகவும் பாதுகாப்பான வழியில் உலகில் எங்கிருந்தும் இலங்கையின் எப்பாகத்திற்கும் தற்போது பணத்தை அனுப்பி வைக்க முடியும்.

அனுப்பும் வழிமுறை
  • நீங்கள் பணத்தை அனுப்பும் வங்கி நாணய மாற்று நிறுவனத்திற்குச் செல்லவும்
  • SBKLKLX என்ற மக்கள் வங்கியின் SWIFT குறியீட்டை வழங்கவும்.
  • மக்கள் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு பணத்தை அனுப்பும் வங்கி நாணய மாற்று நிறுவனத்திற்கு அறிவுறுத்தலை வழங்கவும்.
  • பயனாளியின் விபரங்களைப் பூர்த்தி செய்யவும்.
    • பயனாளியின் முழுப் பெயர் அல்லது முதலெழுத்துக்களுடன் பெயர்
    • முழுமையான கணக்கு இலக்கம் (உ-ம். மக்கள் வங்கி - 15 இலக்க கணக்கு இலக்கம்)
    • வங்கி மற்றும் கிளையின் பெயர் (ஏனைய வங்கிக் கணக்குகளுக்கும் பணத்தை அனுப்பி வைக்க முடியும்)
    • பயனாளியின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு கொள்ளும் இலக்கம் (இருக்கும் பட்சத்தில்).
    • பயனாளி கணக்கொன்றைக் கொண்டிருக்காவிட்டாலும் பணத்தை அனுப்பி வைக்க முடியும், அடையாள அட்டை இலக்கம் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்கவும்.
அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் தொடர்பான விசாரணைகளுக்கு

தயவு செய்து தொடர்பு கொள்ளவும்: முகாமையாளர் - வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் மற்றும் விசாரணைகள் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்)
தொலைபேசி இலக்கம்: +94 112438395 , +94 112437985
மின்னஞ்சல்: teletran@peoplesbank.lk

வெஸ்டர்ன் யூனியன்
Western Union
  • வெஸ்டர்ன் யூனியன் ஊடாக நீங்கள் உலகில் எங்கிருந்தும் இலங்கையிலுள்ள உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியும்.
  • வெஸ்டர்ன் யூனியனின் ஒரு பிரதான முகவராகச் செயற்படுவதன் மூலமாக நாடளாவியரீதியிலுள்ள 700 இற்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக் கொடுப்பனவு மையங்கள் (கிளைகள் மற்றும் சேவை மையங்கள்) மூலமாக உங்களுடைய அவசர பணத் தேவைகளை ஈடுசெய்வதற்கு அணுசரனை வழங்குவதே எங்கள் நோக்கம்.
  • துரித சேவை அழைப்பு இலக்கம்: 0094 11 2386922
top