முற்பணக் கொடுப்பனவு விதிமுறைகள் - (பண முற்பணம்)
1. இலங்கை ரூபா கணக்கொன்றிலிருந்து மேற்கொள்ளப்படும் பட்சத்தில் -
- 50,000/- அமெரிக்க டொலர் அல்லது சமமான வேறு எந்தவொரு வெளிநாட்டு நாணயத் தொகைக்கும் மேற்படாத வகையில் இறக்குமதி செய்யப்படவுள்ள பொருட்களின் மொத்த பெறுமதிக்கு தேவைப்படுகின்ற முற்பண கொடுப்பனவு அனுமதிக்கப்படும்.
- 50,000/- அமெரிக்க டொலர் அல்லது சமமான வேறு எந்தவொரு வெளிநாட்டு நாணயத் தொகைக்கும் மேற்பட்ட வகையில் இறக்குமதி செய்யப்படவுள்ள பொருட்களின் மொத்த பெறுமதிக்கு தேவைப்படுகின்ற முற்பண கொடுப்பனவு பின்வரும் நிபந்தனைகளின் கீழேயே அனுமதிக்கப்படும்.
- முற்பணக் கொடுப்பனவுத் தொடர்பில் தொடர்பில் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வங்கி உத்தரவாதம் அல்லது முற்பணக் கொடுப்பனவுத் தொகைக்கான பதில் கடன் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்; அல்லது
- குறித்த கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையின் தகைமையைக் கருத்தில் கொண்டு தனது அனுமதியை வழங்குவதற்காக இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டாளரால் கோரப்படுகின்ற பெறுமதி சேர் வரி பதிவு இலக்கம், வரி அடையாள இலக்கம் மற்றும் வேறு எந்தவொரு ஆவணங்கள்; அல்லது
2.வெளிநாட்டு நாணயக் கணக்கொன்றின் மூலமாக கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் மேலே (1) (a) மற்றும் (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச எல்லை கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை
- தொகை விலைப்பட்டியல் நிறுவனத்தின் பெயரின் கீழ் இருத்தல் வேண்டும்.
- முற்பணக் கொடுப்பனவை மேற்கொண்டு 180 தினங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் ஆதாரத்தை (அதாவது வர்த்தக விலைப்பட்டியலின் பிரதி ஒன்று மற்றும் சுங்கத் திணைக்களத்தால் முறையாக முத்திரை குத்தப்பட்ட சுங்க பிரகடனப் பத்திரத்தின் பிரதி ஒன்று) இறக்குமதியாளர் சமர்ப்பித்தல் வேண்டும்.
திறந்த கணக்கு விதிமுறைகள்
- ஏற்றுமதியாளர் ஒருவர் பொருட்களை ஏற்றிய பின்னர் தேவையான அனைத்து அனுப்பல் மற்றும் வர்த்தக ஆவணங்கள் இறக்குமதியாளருக்கு நேரடியாக அனுப்பப்பட்டு, எதிர்கால திகதி ஒன்றில் விற்பனையாளரின் பட்டியலுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு உடன்படும் ஏற்பாடு திறந்த கணக்கு எனப்படுகின்றது.
தேவையான ஆவணங்கள்
- வர்த்தக விலைப்பட்டியல்
- பொருட்கள் திறந்த கணக்கு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடும் வகையில் சுங்க அதிகாரியின் கையொப்பமிடப்பட்ட சுங்க பிரகடன படிவம்.
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட வங்கியின் விண்ணப்ப படிவம்
- மத்திய வங்கியின் படிவம் 1 – பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும்