- இலங்கை பிரஜைகள்
- வணிகச் செயற்பாடுகளிலிருந்து போதுமான வருமானத்தை ஈட்டுகின்ற நிறுவனங்கள்
சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
ஒவ்வொரு வியாபாரமும் தனித்துவமானது என்பதை நாங்கள் அறிவோம். அதனாலேயே எங்களது வணிக கடன்கள் மற்றும் அவை தொடர்பான சேவைகளை உங்களுடைய கடன் தேவைகளுக்கு பொருத்தமான வகையில் தனித்துவமான சிறப்பம்சங்களுடன் நாங்கள் வழங்குகின்றோம். உங்களுக்குத் தேவையான உற்பத்திகள் மற்றும் மக்கள் வங்கியின் வணிக கடன்கள் மூலமாக நீங்கள் அடைய விரும்புகின்ற பெறுபேறுகளுக்கான நிபுணத்துவ மற்றும் பிரத்தியேகமான தீர்வுகளை நாம் வழங்கி வருகின்றோம். உங்களுக்கு பொருந்தும் வகையில் மீளச்செலுத்தல், காசுப்பாய்ச்சல் மற்றும் கடன் சேவைகள் பலவற்றை உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
1) கால எல்லைக் கடன்கள்
வர்த்தகம், விவசாயம், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எந்தவொரு வியாபார நோக்கத்திற்காகவும் குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நெகிழ்வுப்போக்கு மற்றும் சௌகரியம் கொண்ட கொடுப்பனவுத் திட்டங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
2) மேலதிகப் பற்றுக்கள்
நடைமுறைக்கணக்கின் மீதி பூச்சியத்தை எட்டும் போது ஒரு கடன் நீடிப்பு வசதியாக இது வழங்கப்படுகின்றது. கணக்கில் போதுமான நிதி இல்லாத போதும் தற்காலிக அல்லது நிரந்தர ஏற்பாடாக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தொகை எல்லை வரை பணத்தை பெறுவதற்கு மேலதிகப் பற்று இடமளிக்கின்றது.
3) வங்கி உத்தரவாதங்கள்
வேறுபட்ட வணிகத் துறை தேவைப்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு தேவைகளுக்கு மூன்றாம் தரப்பின் பேரில் வாடிக்கையாளர்கள் வழங்குவதற்கான பொதுவான உத்தரவாதப் பத்திரங்கள், ஏலப் பிணைகள், செயல்திறன் பிணைகள், முற்பணக் கொடுப்பனவுப் பிணைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
4) முறிகள் மாற்று சேவை
உடனடி கடனை வழங்குவதன் மூலமாக வாடிக்கையாளார்களின் தொழிற்படு மூலதனப் பற்றாக்குறைகளை பூர்த்தி செய்வதற்கு முறிகளை அவற்றின் முதிர்வு காலத்திற்கு முன்பதாகவே மாற்றம் செய்யும் சேவை.
5) பண-பிணை வசதிகள்
சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றில் உள்ள பண மீதிகளுக்கு எதிராக வணிக நோக்கங்களுக்காக நிலையான கடன் தவணைக் கொடுப்பனவுகள் அல்லது முடிந்த போது செலுத்தக்கூடிய வசதிகளை நாம் கருத்தில் கொள்கின்றோம்.
வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகள், நோக்கங்கள் மற்றும் மீள்கொடுப்பனவு செய்யக்கூடிய ஆற்றல், வழங்கப்படும் பாதுகாப்பு பிணை ஆகியவற்றின் அடிப்படையில் நெகிழ்வுப் போக்குடனான கடன் தொகை தீர்மாணிக்கப்படும்
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் நோக்கங்களுக்கேற்ப குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட காலம் என நெகிழ்வுப்போக்குடனான பல்வேறுபட்ட மீள்கொடுப்பனவுக் காலத்தை நாம் வழங்குகின்றோம்.
நிலையான அல்லது மிதக்கும் வீத அடிப்படையில் வாடிக்கையாளரின் தெரிவிற்கு ஏற்ப நிலவுகின்ற சந்தை வீதங்களுக்கு இணையாக கவர்ச்சியான வட்டி வீதங்களை நாங்கள் வழங்குகின்றோம்.
கடன்கள் மீதான வட்டி வீதங்கள்
திருமதி. விராஜினி முனசிங்க
தலைமை முகாமையாளர் - தொழிற்துறை வங்கிச்சேவை
தொலைபேசி இலக்கம் - 011-2481585
தொலைநகல் இலக்கம் - 011-2341295
மின்னஞ்சல் - virajini@peoplesbank.lk
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை