தேசத்தின் நாடித் துடிப்பாகத் திகழுதல்
மிகவும் எளிமையான பின்னணியுடன் செயற்பட ஆரம்பித்த எங்களது வங்கி, ஒவ்வொரு இலங்கையரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களின் நாடித்துடிப்பாக மாறியுள்ளதுடன், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து தேசத்தின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வருகின்றது.
வாடிக்கையாளர் மீதான கவனம் மற்றும் துரிதமான செயற்பாடு
தீர்மானத்தை மேற்கொள்வதில் வாடிக்கையாளர்களை நடுநிலை வகிதஂது கொண்டு எப்போதும் அவர்களுக்குத் திருப்தியளிக்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்கி எமது சேவைகளின் பெறுமானத்தை மேம்படுத்துவதை முன்னெடுத்துச் செல்கின்றோம். மாற்றத்தைத் தழுவும் வகையில் நாம் மீள்இலக்கணம் வகுத்து எமது வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நெகிழ்வுப் போக்குடனும், துரித செயற்பாட்டுடனும் செயற்பட்டு வருகின்றோம்.
நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல்
ஒரு நிதியியல் நிறுவனம் என்ற வகையில், எமது வங்கி ஸ்தாபிக்கப்பட்ட காலம் தொடக்கம் நாம் பேணிப் பாதுகாத்து, எம் கலாச்சாரமாகக் கட்டியெழுப்பியுள்ள நேர்மை மற்றும் நாணயம் ஆகியனவே எமது பலங்களாக உள்ளது. இதனையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.பொறுப்புணர்வு மிக்க மற்றும் நம்பகமான ஒரு வங்கி என்ற வகையில், எமது நடத்தை தொடர்பில் எம்முடன் தொடர்புபட்ட முக்கிய தரப்பினர் அனைவருக்கும் நாம் பொறுப்புக் கூறும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.
தொடர்ச்சியாக கற்கும் கலாச்சாரம் மற்றும் ஓரணியென்ற ஒற்றுமை உணர்வு
எங்களது ஆற்றல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு வெளிப்படையான அறிவை மேம்படுத்தி, மறைமுக அறிவை தேடிக் கண்டறிந்து, பதிவு செய்யும் வகையில் எமது அறிவுத்தளத்தை மேம்படுத்தும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எமது வெற்றி எமது பணியாளர்களிலேயே தங்கியுள்ளது என நாம் நம்புவதுடன், பொதுவான இலக்குடன் அனைவரும் ஓரணியாக இணைந்து ஒற்றுமை உணர்வுடன் செயற்பட்டு வருகின்றனர்.
வலுவூட்டுதல் மற்றும் பன்முகத்தன்மை
நாம் எமது பணியாளர்களுக்கு வலுவூட்டி, புத்தாக்கமான உற்பத்திகள், சேவைகள் மற்றும் நடைமுறைகள் மூலமாக அவர்கள் மத்தியில் படைப்பாற்றலுக்கு இடமளித்து வருகின்றோம். எமது வாடிக்கையாளர்களின் வேறுபாடுகளுக்கு நாம் மதிப்பளிப்பதுடன், அவர்களின் பன்முகத்தன்மையை விளங்கிக் கொள்வது எமக்கு இன்னமும் உரமூட்டுகின்றது.