இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட கடன் திட்டமே ஜய இசுற. விவசாயம், மீன்பிடி, கால்நடை, மலர்ச்செடி வளர்ப்பு, தோட்டச் செய்கை, வெளிச்ச ஏற்பாடு பொறியியல், அச்சிடல், சுற்றுலாத்துறை, கைவேலைப் பொருட்கள், ஆடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழிற்துறைப் பிரிவுகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- கடன் வழங்கப்படும் துறைகள்
மேற்குறிப்பிட்ட இரு பிரிவுகளின் கீழும் குறிப்பாக பின்வரும் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு இக்கடன்திட்டம் கருத்தில் கொள்ளப்படுகின்றது:
- விவசாயம்
- மீன்பிடி
- கால்நடை
- மலர்ச்செடி வளர்ப்பு
- தோட்டச் செய்கை
- வெளிச்ச ஏற்பாடு பொறியியல்
- அச்சிடல்
- சுற்றுலாத்துறை
- கைவேலைப் பொருட்கள்
- ஆடை
- தகவல் தொழில்நுட்பம்
- உற்பத்தித் துறைப் பிரிவுகள்
(முதலீட்டு நோக்கங்கள் மற்றும் தொழிற்படு மூலதன பாகங்கள் ஆகியன ஒன்றிணைந்த முதலீட்டு நோக்கங்கள் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக கருத்தில் கொள்ளப்படும்.)
- அதிகபட்ச தொகை
- சிறு தொழில் முயற்சிகள்
- உள்நாட்டுச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 50.0 மில்லியன்.
- ஏற்றுமதிச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 100.0 மில்லியன்.
- நடுத்தர தொழில் முயற்சிகள்
- உள்நாட்டுச் சந்தைக்கு உற்பத்திகள்/சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 200.0 மில்லியன்.
- ஏற்றுமதிச் சந்தைக்கு உற்பத்திகள்/ சேவைகளை வழங்கும் சாதாரண கடன்பெறுனர்கள் - அதிகபட்சம் ரூபா 400.0 மில்லியன்.
- மீள்கொடுப்பனவுக் காலம்
- முதலீட்டுக் கடன்
- அதிகபட்சமாக ஒரு வருட சலுகைக் காலம் அடங்கலாக அதிகபட்சமாக 5 ஆண்டுகள்.
- அதிகபட்சமாக 3 ஆண்டுகள். சலுகைக் காலம் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
- தனிப்பட்ட உத்தரவாதங்கள், அசையும் அல்லது அசையாச் சொத்து அடமானம் மற்றும் வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வேறு எந்தவொரு பிணை.