சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்சமீபத்திய வட்டி வீதம்
சமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்
மேலும் வீதம்* நிபந்தனைகள் பொருந்தும்
இசுறு உதான பிறப்பிலிருந்து 5 வயது நிறைவு வரையுள்ள சிறார்களிற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறார்கள் சேமிப்புக் கணக்கு. இசுறு உதான சேமிப்புக் கணக்கு சிறார்களின் கல்வி மற்றும் மேம்பாடுகளிற்கு பெறுமதிமிக்க பரிசில்ளை வழங்குகின்றது. இசுறு உதான சிறார்களிற்கு சிறந்த எதிர்காலத்தினை உருவாக்க விரும்புகின்ற பெற்றோர்களின் சிறந்த ஓர் தேர்வாகும்.
மேலும் சிறார்களிற்கு பரிசளிப்பதற்கான அன்பளிப்புக் கூப்பன்களை மக்கள் வங்கியிடமிருந்து பெற்று எந்தவொரு சிறாருக்கும் பரிசளித்து உங்கள் அன்பினை வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
இசுறு உதான கணக்கின் சிறப்பம்சங்களும் நன்மைகளும்
• சாதாரண சேமிப்புக் கணக்குளை விட கூடிய வட்டி வீதம்
• கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள்
• கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.100/- இனை வங்கியே வைப்பு செய்தல்.
• நாளாந்த மீதிகளின் மீது வட்டி கணிப்பீடு
• ரூபா.200/-, 500/-, 1000/- மற்றும் 2000/- பெறுமதிகளிலான அன்பளிப்புக் கூப்பன்களை எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலுமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல். மேலும் அன்பளிப்புக் கூப்பன்களை இலகுவாக இசுறு உதான கணக்கில் வைப்பிலிடவோ அல்லது புதிய கணக்கொன்றினை ஆரம்பிக்க கூடியதாகவோ இருத்தல்.
• சிறார்கள் 6 வயதினை எட்டும்போது இசுறு உதான சேமிப்புக் கணக்கானது சிசு உதான சேமிப்புக் கணக்காக சுயமாகவே மாற்றம் செய்யப்படும்.
இசுறு உதான கணக்கினை ஆரம்பிப்பது எவ்வாறு?
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் உங்கள் சிறாரின் பெயரில் கணக்கொன்றினை பெற்றோரினாலோ அல்லது பாதுகாவலரினாலோ இலகுவாக ஆரம்பிக்க முடியும்.
இசுறு உதான கணக்கு ஆரம்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம்-
சிறாரின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி
யாருக்கு
இசுறு உதான கணக்கானது பெற்றோரினாலோ பாதுகாவலளாரினாலோ ஆரம்பிக்கக் கூடியதாக இருத்தல்.
சாதாரண சேமிப்புக் கணக்குளை விட 2% கூடிய வட்டி
இசுறு உதான கணக்கின் சிறப்பம்சமான அன்பளிப்புக் கூப்பன்கள்
• கல்வி கற்றலுக்கும் மேம்பாட்டிற்குமான பெறுமதியான பரிசில்கள்
• நாளாந்த மீதிகளின் மீது வட்டி கணிப்பீடு
• கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.100/- இனையும் ஏற்கனவே முன்பள்ளி செல்லும் சிறாருக்கு முதலாவது வைப்புத்தொகையாக ரூபா.250/- இனை வங்கியே வைப்பு செய்தலும்
மக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.
© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை